அனிதா சம்பத்தின் நிஜ ஆட்டோகிராஃப்.. 56 வருடங்கள் கழித்து இலங்கை உறவுகளை தேடிப் பயணம்..!
சென்னை: இலங்கையில் வாழும் தனது உறவினர்களை முதன்முறையாகத் தேடிச் சென்று பார்த்த அனுபவத்தை அனிதா சம்பத் மிக உருக்கமாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
ஆரம்பக் காலத்தில் செய்தி வாசிப்பாளராக அதிகம் அறியப்பட்ட அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஒரு பிரபலமாக மாறி போய்விட்டார். அவருக்கு என்றே தனியாக ஒரு விலாக் நடத்தி வருகிறார். அதில் தனது சமையல் அனுபவம் மற்றும் ஊர் சுற்றும் அனுபவங்களை வீடியோவாக வெளியிட்டுவருகிறார். அவர் கடந்த வாரம் இலங்கைக்குச் சுற்றுலா சென்றிருந்தார். அதைச் சுற்றுலா என்று சொல்லலாமா என்பதுகூட சந்தேகமாக உள்ளது.

கிட்டத்தட்ட 56 வருடங்களாகத் தொடர்பே இல்லாமல் அறுந்து போய்விட்ட உறவினர்களைத் தேடிச் சென்று சந்தித்த அனுபவத்தை உணர்ச்சிகரமாக எடுத்துக் கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இவரது பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும் அவரது மூதாதையர்கள் இலங்கை தேயிலைத் தோட்டத்தில் கூலிகளாக வேலை பார்த்து அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களைத்தான் அனிதா இப்போது தனது தாய் மாமன் மற்றும் கணவருடன் போய் சந்தித்துத் திரும்பி இருக்கிறார்.
அனிதா சம்பத், “இலங்கையில் உள்ள கங்கா ராமையா கோயிலுக்குப் போனோம். இது கொழும்பு நகரத்தில் உள்ள புத்தர் கோயில். நம்ம ஊர் கோயில்களுக்குச் சென்றால் நுழைப்புக் கட்டணம் எல்லாம் கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தப் புத்தக் கோயிலுக்குள் போகவே நுழைவுக் கட்டணம் கட்டவேண்டும். இலங்கை மதிப்பில் ஒரு ஆளுக்கு 400 ரூபாய். நம் இந்திய மதிப்பில் அது 110 ரூபாய் வரும். நாங்கள் 4 பேர் போனோம். மொத்தம் 1600 ரூபாய் கட்டணம் செலுத்தினோம்.
இலங்கையில் 70% மக்கள் புத்த மதத்தைத்தான் பின்பற்றுகிறார்கள். அதனால் அதிகமான புத்த கோயில்கள் உள்ளன. இங்கே உள்ள புத்த மதத்திற்குத் தேரவாடா புத்திஸம் என்று சொல்கிறார்கள். மொத்தம் 5 நாடுகளில் இந்தத் தேரவாதா புத்த மதம் உள்ளது. அதாவது மியான்மர், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் இந்த வகையான புத்த மதம் உள்ளன” என்கிறார்
நம்ம ஊர் கோயில்களில் தல புராணத்தைப் படமாகச் சுவர்களின் வரைந்து வைத்துள்ளதைப் போலவே இந்தக் கோயிலின் புத்தரின் கதையைச் சுவர் ஓவியமாகத் தீட்டி வைத்துள்ளனர். மேலும் ஒவ்வொரு புத்தர் சிலையும் பூதாகரமாகப் பெரிது பெரிதாக உள்ளது. மஞ்சள் நிற உடையில் புத்தர் காட்சி தருகிறார். கருவறையில் உள்ள புத்தர் குறைவான வெளிச்சத்தில் இருள் கலந்து காட்சி தருகிறார். அங்கே உள்ளே சாமி தரிசனத்திற்குச் சென்றவுடன் 'நீங்கள் இந்துவா? வேறு மதமா?’ என்று கேள்வியைக் கேட்கிறார்கள். அனிதாவையும் அதே மாதிரி பிட்சு ஒருவர் கேட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அனிதா சம்பத், “இந்தோனேசியாவில் போரா புத்தா என்று ஒரு இடம் உள்ளது. அங்கே ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். அதை அப்படியே அச்சு அசலாக இந்தக் கொழும்பு புத்த கோயிலுக்குள் செய்து வைத்துள்ளார்கள். நாங்கள் முதலில் போனது புதியதாகக் கட்டிய கங்கா ராமையா புத்தர் கோயில். அதன் உண்மையான கோயில் 150 வருடங்கள் பழமையானது.
இதன் பக்கத்திலேயே கொஞ்ச தூரம் தள்ளி உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி ஏரி போல் தண்ணீர் உள்ளது. அதன் நடுவே கேரளா ஐயப்பன் கோயில் தோற்றத்தில் கூரை வேய்ந்த கட்டடத்தின் உள்ள புத்தர் சிலை உள்ளது. இந்த இடம் இரவில் போனால் மனதை அப்படியே அள்ளும். அந்தளவுக்குக் குளுமை, அமைதி என இதயத்திற்கு இதமாக இருக்கிறது.
அடுத்து நூரலியா போனோம். இது ஊட்டி மாதிரிதான். ஆனால், அதைவிடக் குளுமையும் பசுமையும் அதிகம். இங்கே மரியா டீ எஸ்டேட் ஒன்று உள்ளது. அதற்குக் கொழும்பிலிருந்து பஸ் போகிறது. எங்கள் பெரியப்பாவின் வீடு கொட்டகலையில் இருக்கிறது. இந்தக் கொட்டகலை, தலவாக்கலை, நூரலியா பகுதிகளிலும் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள்”என்கிறார்.
அவர் நூரலியாவுக்குப் போகும் வழிகளில் உள்ள இடங்களைப் பார்க்க அப்படியே கேரளா போல் இருக்கிறது. கோயில்கள், கடைகள் எல்லாம் தமிழ்நாட்டை அப்படியே பிரதிபலிக்கின்றன. மக்களும் மிக எளிமையாகவே வசிக்கிறார்கள். நம்ம ஊர் ஷேர் ஆட்டோக்களைப் போலத்தான் இந்த ஊரிலும் நிறைய வண்டிகள் உள்ளன. ஆனால், பச்சை மற்றும் சிவப்பு வண்ணத்தில் உள்ளன. அரசுப் பேருந்து கூட ஆடம்பரமான அலங்காரத்துடன் காணப்படுகிறது.
தொடர்ந்து அனிதா கூறுகையில், “நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து கொழும்பு வந்தோம். பின் ஹட்டன் போய் அங்கிருந்து தலவாக்கலை வழியே மரியா டீ எஸ்டேட் போனோம். இந்த இடம் வால்பாறை மாதிரி இருக்கிறது. இலங்கையில் உள்ள என் சொந்தங்களை நான் முதன்முதலாகத் தேடிப் போய் சந்தித்தேன். ஆனால், என்னுடன் பயணித்த என் தாய்மாமா கிட்டத்தட்ட 56 வருடங்கள் கழித்து இலங்கையில் உள்ள சொந்தங்களைப் பார்க்கிறார். அந்த நிமிடங்களை நினைக்கும்போது கண்கலங்காமல் என்னால் இருக்கவே முடியவில்லை.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலமான 1815இல் இலங்கையில் சாலை போடுவதற்காகவும் தேயிலைத் தோட்டத்தைத் தொடங்கி பெரிய தொழிலாக மாற்றுவதற்காகவும் தமிழ்நாட்டில் உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல் எனத் தென் மாவட்டங்களிலிருந்து இலங்கைக்குத் தமிழர்களைக் கூலியாகக் கூட்டி வந்தார்கள். அப்படிக் குடியேறிய தமிழர்கள் கிட்டத்தட்ட 150 வருடங்களாக இங்கே வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிடம் ஆண்ட்ராய்டு மொபைல் எல்லாம் இல்லை. இப்போதும் பட்டன் வைத்த மொபைல் தான் உள்ளது. ஆகவேதான் மாமா அவரது சொந்தங்களை ஜூம் வழியாகக் கூட இவ்வளவு வருடங்களாகப் பார்க்க முடியவில்லை.
எங்கள் தாத்தாவின் குடும்பம் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து இலங்கைக்குப் போனவர்கள். அப்படித்தான் இலங்கையில் என் அம்மா வழி கொள்ளுத்தாத்தா, தாத்தா எனப் பல சொந்தங்கள் இங்கே வாழ்ந்து வருகிறார்கள். என் அம்மாவும் தாய்மாமாவும் சின்ன வயதாக இருக்கும்போதே இந்தியா வந்துவிட்டனர்” என்று பெரிய நாவல் மாதிரி கதை சொல்லி இருக்கிறார் அனிதா. அதை அப்படியே ஒரு ஆட்டோகிராஃப் அளவுக்குப் படமாக எடுக்கலாம் போல் தெரிகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications