ரியல் எஸ்டேட்டில் அதிரடி.. கட்டுமானங்களில் கட்டிட தரச்சான்றிதழ் தாக்கல் செய்யணுமா? அரசின் முடிவு?
சென்னை: கட்டுமானங்களில், சிலசமயங்களில், தரமில்லாத பொருட்களை பயன்படுத்துவதால், கட்டிடங்கள் இடிந்து விழும் நிலைமை உள்ளதால், தரச்சான்றை கட்டாயமாக்க, தமிழக அரசும், ரியல் எஸ்டேட் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வீட்டுமனை திட்டங்களில் உண்டாகும் சர்ச்சைகளை தீர்ப்பதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதனடிப்படையில், தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.112, நாள் 22.6.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட "தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்" செயல்பட்டு வருகிறது
விதிமுறைகள்: கடந்த 2016ல், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை பதியவும், புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன... அதேபோல, 5,000 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கியது.
ஆனால், "ரெரா" சட்டத்தில் பதிவு செய்யப்படாத சொத்துக்களை வாங்கும் நிலையில், ஏதாவது சிக்கல்கள் வந்தால், ஒழுங்குமுறை குழுமத்தில் புகார் அளிக்க முடியாது..கட்டிடத்தின் தரச்சான்றிதழ்கள் கேட்கப்படுவது இல்லை. ஆனால், சமீப காலமாக கட்டிடங்களின் தரம் சார்ந்த பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. சிலசமயம, கட்டிடத்தின் தரம் சார்ந்த புகார்களையும் விசாரிக்க வேண்டியிருக்கிறது.
கட்டிடங்கள்: எனவேதான், அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில், மகாராஷ்டிரா ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, கட்டிடங்களை பதிவு செய்யும்போது, கட்டுமான நிறுவனங்கள் தரத்தை உறுதி செய்வதற்கான தரச்சான்றையும் தாக்கல் செய்வது கட்டாயம் என்று தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாம்.. இந்த உத்தரவானது, வீடு வாங்குவோருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்றும் நம்பப்படுகிறது.
இதனிடையே, மகாராஷ்டிராவை பின்பற்றி, தமிழக ரியல் எஸ்டேட் ஆணையமும் கட்டிட தரச்சான்று தாக்கல் செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழக வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பும் வேண்டுகோள் விடுத்துள்ளது..
கோரிக்கை: காரணம், தமிழகத்தில் கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், அதற்கான பணிகளை துணை ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மேற்கொள்கின்றன. இதனாம் சில சமயம் தரமில்லாத பொருட்களை பயன்படுத்துவதால், கட்டிடங்கள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான், தரச்சான்றை கட்டாயமாக்க, தமிழக அரசும், ரியல் எஸ்டேட் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications