ரூ 2 கோடி நிலத்தில் கட்டப்பஞ்சாயத்து! ரவுடி நாகேந்திரன் மகன் மீது ரியல் எஸ்டேட் அதிபர் புகார்!
சென்னை: நிலப் பிரச்சனையில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக ரவுடி நாகேந்திரனின் 2ஆவது மகன் அஜித் மீது ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இவர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் திருவேங்கடம் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அண்மையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் உடல்நிலை பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு அஸ்வதாமன், அஞ்சலை உள்ளிட்ட 14 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களில் 12 பேருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. இந்த நிலையில் இவர்கள் 12 பேருக்கும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களால் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க சென்னை போலீஸார் கண்காணித்து வந்தனர்.
ரவுடி நாகேந்திரனின் இரண்டாவது மகன் அஜித்ராஜ், ஏற்கெனவே ஒரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பரோலில் வந்திருந்தார். அப்போது அவர் தந்தையின் சடலத்தின் முன்பு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது மீண்டும் சிறையில் இருக்கும் அஜித் மீது ரியல் எஸ்டேட் அதிபரான அண்ணா நகரைச் சேர்ந்த லோகநாதன் (53) என்பவர் தனது ரூ 2 கோடி மதிப்புடைய பிரச்சனையில் முன்பு அஜித் தலையிட்டு மிரட்டி கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாகவும் தனது சொகுசு காரை பறித்துச் சென்றதாகவும் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications