வீடியோ கேமராவை ஆன் செய்துட்டு,பெண் செய்த ரியல் சம்பவம்.. அந்த 1 நிமிட காட்சியை கண்டு ஆடிப்போன மக்கள்
சென்னை: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் பதிவிட முயன்ற போது, இளம்பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள் இப்படியான ரீல்ஸ் மோகம் உயிரை பறித்து வருவது பெரும் கவலையை பொதுமக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.. என்ன நடந்தது?
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்...

ரீல்ஸ் வீடியோக்கள்
குறிப்பாக, குறுகிய கால வீடியோக்களான ரீல்ஸ் எடுப்பதில் பலரும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மோகத்தில் பல நேரங்களில் மக்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில்தான் இப்போதும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு பரிதாபகரமான சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 27 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் வசித்து வந்தார். அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிடுவதற்காக எப்போதும் வித்தியாசமான முறையில் வீடியோக்களை எடுத்து அப்லோடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சம்பவ தினத்தன்று அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது, ஒரு புதிய ரீல்ஸ் எடுக்க முடிவு செய்தார். அதாவது அவர் தூக்கில் தொங்குவது போன்ற காட்சியை வீடியோ எடுத்து பதிவிட திட்டமிட்டதாக தெரிகிறது. இதற்காக அவர் வீட்டில் இருந்த ஒரு துணியை பயன்படுத்தித் தூக்குக் கயிறு போல தயார் செய்து, அதனை உயரத்தில் கட்டி உள்ளார்.
நிஜமான தூக்கு கயிறு
வீடியோவை பதிவு செய்யத் தன்னுடைய செல்போனை தகுந்த இடத்தில் வைத்துவிட்டு, ரீல்ஸ் சீனில் நடிக்க ரெடியானார்.. அப்போது துரதிர்ஷ்டவசமாக அவர் கட்டியிருந்த கயிறு போன்ற அமைப்பு அவரது கழுத்தை திடீர்னு இறுக்கிவிட்டது.. அதிலிருந்து தப்பிக்க அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் முடியவில்லை.
எதிர்பாராத விதமாக அந்தப் பெண் நிஜமாகவே தூக்கில் தொங்கும் நிலை உருவானது. அந்த சமயத்தில் வீட்டிலும் உதவிக்கு யாரும் இல்லாத காரணத்தால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தே போனார்.
சிறிது நேரம் கழித்து அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வந்த போது, அந்தப் பெண் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்தப் பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டனர்..
அந்த 5 நிமிடம்
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ரீல்ஸ் எடுக்கும் போது ஏற்பட்ட தவறால் இந்த விபத்து நடந்தது உறுதி செய்யப்பட்டது. இளம்பெண்ணின் மறைவு அவரது குடும்பத்தினரை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது...
சோஷியல் மீடியா ரீல்ஸ் மோகத்தில் ஓர் இளம் உயிர் இப்படி வீணாகப் போனது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ரீல்ஸ் எடுக்கும் போது போதிய பாதுகாப்பு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் அல்லது ஆபத்தான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும், புகழ் பெற வேண்டும் என்ற பேராசையில் உயிரை பணயம் வைக்கும் இதுபோன்ற செயல்களை ஜீரணிக்கவே முடியவில்லை...!!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications