அன்றே கணித்த திருமாவளவன்.. ஆளூர் ஷாநாவாஸுக்கு சீட் கொடுக்காததற்கு இதுதான் காரணம்!
சென்னை: தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. குறிப்பாக விஜய்க்கு விசிக ஆதரவு அளிக்குமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில் ஆளூர் ஷாநவாஸ் அளித்திருக்கும் பேட்டி கவனம் பெற்றிருக்கிறது.
இந்த சட்டமன்ற தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் நேரடியாக களமிறங்கியிருந்தார். ஆனால், திடீரென போட்டியிடுவதை வாபஸ் வாங்கிக்கொண்டார். அந்த இடத்தில் ஜோதிமணி என்பவர் களமிறக்கப்பட்டார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஆளூர் ஷாநவாஸுக்கம், எஸ்.எஸ்.பாலஜிக்கும் சீட் கொடுக்காததுதான். இது திருமாவளவன் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இருவரும் கட்சியின் கொள்கைகளையும், மதச்சார்பற்ற கூட்டணியின் கருத்துக்களையும் பரவலாக கொண்டு சென்றவர்கள். அதிலும் ஷாநாவாஸின் பேச்சுக்கள், எதிர்க்கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும். இருந்தும் கூட ஏன் அவருக்கு திருமாவளவன் வாய்ப்பு அளிக்கவில்லை? என்று கேள்விகள் எழுந்திருந்தன.
பலரும் திருமாவளவனை இது குறித்து விமர்சித்திருந்தனர். நல்ல வேட்பாளரை திருமாவளவன் களமிறக்காமல் தவிர்த்திருக்கிறார் என்று கூறியிருந்தனர்.
இப்போது களம் மாறியிருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விஜய் பக்கம் போய் இருக்கிறது. விஜய்க்கு இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால், விசிகவின் ஆதரவும் இடதுசாரிகளின் ஆதரவும் அவசியம். எனவே விரைவில் விசிக விஜய் பக்கம் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த நேரத்தில் ஷாநாவாஸ் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் செய்தது தவறு என்று பேசியிருக்கிறார்.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் உடன் இருந்தது திமுகதான். பல மாநிலங்களில் காங்கிரஸுக்கு நம்பிக்கையான பாட்னர் இல்லாதபோது, தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு திமுக உடன் இருந்தது. மற்ற கூட்டணி கட்சிகள் யாரும், ஏன் காங்கிரஸே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாதபோது, திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தியை முன்னிறுத்தினார்.
காங்கிரஸ் கைவிடப்பட்ட நிலையில் திமுக உடன் நின்றது. ஆனால், திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது காங்கிரஸ் முதல் ஆளால் விஜய் உடன் கூட்டணிக்கு சென்றுவிட்டது. நம்பிக்கை துரோகம் இது என்று ஷாநாவாஸ் பேசியிருக்கிறார்.
விசிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படாத நிலையில், ஒரேயடியாக காங்கிரஸை அட்டாக் செய்து பேசியிருப்பது விசிக தலைமைக்கு டென்ஷன் ஏற்றிருக்கிறது. இவரது பேச்சால் தவெக-விசிக கூட்டணி தாமதமாகவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது, கடந்த தேர்தலில் ஷாநாவாஸை திருமாவளவன் முன் நிறுத்தாததற்கு காரணம், ஷநாவாஸ் திமுகவிடம் போய்விட்டார் என்பதால்தான் என்று விமர்சனங்கள் எழுந்தன. இப்போது ஷாநாவாஸ் பேசுவதை பார்க்கும் போது அது உண்மைதானோ? என்கிற கேள்வி எழுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு












Click it and Unblock the Notifications