பசை பார்ட்டிகளுக்கு அதிமுகவில் சீட்.. சொந்த தொகுதிகள் கிடைத்ததால் உற்சாகத்தில் வேட்பாளர்கள்
சென்னை : தொகுதி பங்கீடு வேலைகளை ஏறக்குறைய முடித்து விட்ட அதிமுக, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக துவங்கி உள்ளது.
சில இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றம்சாட்டினாலும், கட்சி தலைமை அதை மறத்துள்ளது. இருந்தாலும் தங்களுக்கு கேட்ட தொகுதிகள் கிடைத்த சந்தோஷத்தில் வேட்பாளர்கள் உற்சாகமாக தேர்தல் வேலைகளை துவக்கி உள்ளனர்.

சொந்த தொகுதிகளில் சீட்
முதல்வர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் சொந்த தொகுதியிலேயே விருப்ப மனு அளித்து, அதே தொகுதியை பெற்றுள்ளனர். இதனால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதே அதிமுக.,வின் கணக்கு. தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சொல்லியே ஓட்டு கேட்க முடியும் என அதிமுக தலைமை கருதுகிறது.

பசை உள்ளவர்களுக்கு சீட்
ஒரு சில அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் தவிர மற்ற அனைவருக்கும் மீண்டும் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் பசையுள்ள, செல்வாக்கான ஆட்கள் என்பதால் தேர்தல் செலவிற்கு கட்சியில் இருந்து பணம் தரவில்லை. கட்சியிலும் சரி, தொகுதியிலும் சரி அதிக செல்வாக்கு நிறைந்தவர்களுக்கே சீட் அளிக்கப்பட்டுள்ளதால் பல தொகுதிகளில் இப்போதே வெற்றி உறுதியாகி விட்டதாக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வெற்றி உறுதியான வேட்பாளர்கள்
முதல்வர் போட்டியிடும் எடப்பாடி, அமைச்சர் உதயகுமார் போட்டியிடும் திருமங்கலம், செல்லூர் ராஜூ போட்டியிடும் மதுரை மேற்கு, சீனிவாசன் போட்டியிடும் திண்டுக்கல் உள்ளிட்ட பல தொகுதிகளில் வெற்றி உறுதியாகி விட்டதாக அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். அதே போன்று தொகுதி பேரை அடைமொழியாக வைத்து பிரபலமானவர்கள் பலருக்கும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் சபாஷ் பெற்ற அமைச்சர்கள்
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு பிரச்னை இல்லாமல் சுமூகமாக நான்கரை ஆண்டுகள் ஆட்சியை கொண்டு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா - எம்ஜிஆர்.,க்கு கோயில் கட்டியதுடன் கஜா, நிவர் புயல் போன்ற பேரிடர் காலங்களில் நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்த அமைச்சர் உதயக்குமார், கொரோனாவை எதிர்கொள்ள திறம்பட செயல்பட அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஏற்கனவே பல சமயங்களில் மக்களிடம் சபாஷ் பெற்றுள்ளனர். இது அதிமுக.,விற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

சிவராத்திரியில் தேர்தல் பணி துவக்கம்
விருப்ப மனு அளித்த உடனேயே தங்களுக்கு சீட் உறுதி என நிலவத்தை தெரிந்து கொண்ட நடப்பு எம்எல்ஏக்கள் பலர், நகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளனர். வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டு விட்டதால் சிவராத்திரியான இன்று, தங்கள் பகுதி கோயில்களில் பூஜையை போட்டு, தேர்தல் வேலையை உற்சாகமாக துவங்கி உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் ஓட்டுக்களை பெற திட்டம்
தேமுதிக தனித்து போட்டியிட்டால், அவர்களின் ஓட்டுக்களையும் எளிதில் கைப்பற்றி விடலாம் என அதிமுக கணக்கு போட்டுள்ளது. திமுக.,வின் பிரசார வியூகங்களை தகர்க்கவே அவரவர் தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிட எம்எல்ஏ.,க்களை அதிமுக களமிறக்கி உள்ளது. திமுக பலமாக நினைக்கும் தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள் சிலரை களமிறக்கி விட்டுள்ளது. பதவியில் இல்லாமல் அவர்கள் செய்த பணிகளை சொல்லி ஓட்டுக் கேட்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications