“எல்லோருக்கும் ஒரே அசைன்மென்ட்” - ஆதீன சர்ச்சையில் இணைந்த ஆளுநர் - பேச்சின் பின்னணி என்ன?
தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் அமரச் செய்து சுமந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு ஆன்மீகவாதிகள், இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தருமபுரம் ஆதீன பல்லக்கு விவகாரத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தி.மு.க அரசை கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழ்நாடுதான் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்வள கருத்தரங்கில் ஆளுநர்
இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு குறித்த 12வது கருத்தரங்கம் சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் ஒன்றிய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடியின் தலைமையில் நாடு பல்வேறு சாதனைகளை புரிந்து வருவதாகத் தெரிவித்தார்.

ஆன்மீக தலைநகரம்
இந்த கருத்தரங்கில் பேசிய ஆளுநர் ரவி, பிரதமர் மோடியை மிகவும் பாராட்டிப் பேசினார். மேலும், "இந்தியாவின் ஆன்மீக தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியா குறித்த பார்வையை உணர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய பெரியவர்கள் பலரும் இதைத்தான் சொல்லி இருக்கிறார்கள்" எனவும் கூறினார்.

தருமபுரம் சர்ச்சை
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம்' நிகழ்ச்சியில் ஆதீனத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்லும் நிகழ்வுக்குத் தி.க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் பல்லக்கில் ஆதீனத்தை தூக்கிச் செல்ல மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் தடைவிதித்து உத்தரவிட்டார்.
தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல யார் தடை விதித்தாலும், தடையை மீறி பல்லக்கு தூக்குவோம் என மதுரை ஆதீனம் உள்ளிட்ட ஆன்மீகவாதிகளும், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி ஆகிய அமைப்புகளும் கூறி வருகின்றன.

ஆளுநர் முரண்பாடு
தருமபுரம் ஆதீன சர்ச்சையை பா.ஜ.க தலைவர்களும் கையில் எடுத்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சட்டப்பேரவையிலும் இந்த விவாதம் நடந்தது. இந்நிலையில்தான் ஆளுநர், "தமிழ்நாடுதான் ஆன்மீக தலைநகரம்" எனப் பேசியிருக்கிறார்.
நீட் மசோதா விவகாரம் தொடங்கி, எழுவர் விடுதலை மசோதா, துணைவேந்தர்கள் நியமனம் என தொடர்ந்து தி.மு.க அரசுடன் ஆளுநர் முரண்பட்டு வருகிறார். இந்நிலையில், ஆதீன சர்ச்சை விவகாரத்திலும், ஆன்மீக கருத்தை அவர் பேசியிருப்பது பா.ஜ.கவுக்கு மைலேஜ் ஏற்படுத்திக் கொடுக்கவே எனக் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலிட அசைன்மெண்ட்
தருமபுரம் ஆதீன மட பல்லக்கு விவகாரத்தை வைத்து இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க என முன்னிறுத்தும் திட்டத்தோடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வரும் நிலையில், ஆளுநரையும் இந்த மேட்டரில் பா.ஜ.க தலைமை பேச வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இல்லையென்றால், மீன்வளம் தொடர்பான கருத்தரங்கில் ஆன்மீகம் பற்றிப் பேச வேண்டிய தேவை என்ன என்றும் எதிர் தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications