ஸ்பின்னர்களை சேர்த்தால் போதாது? பேட்ஸ்மேன்களும் ரன்கள் அடிக்க வேண்டும்.. ஆஸி தோல்விக்கு என்ன காரணம்?
ஆஸ்திரேலிய அணி கம்பேக் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
சென்னை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வழக்கம் போல் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா அணி, இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமாக அச்சத்தில் 58 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்கும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருந்தன. முதல் போட்டியில் இந்திய ஆடுகளங்கள் பற்றிய எவ்வித தெளிவும் இல்லாமல், களமிறங்கி தோல்வியடைந்தது.
ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றபடி எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டமிடலோடு களமிறங்கியது. ஆனால் அந்த திட்டமிடல் வெறும் ஸ்வீப் மற்றும் அட்டாக்காக மட்டும் இருந்ததே ஆஸ்திரேலியா அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கவாஜா ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பாடம் எடுத்து காண்பித்தார்.

ஸ்வீப் ஷாட்
ஏனென்றால் வெறும் ஸ்வீப் ஷாட் மட்டுமல்லாமல், சில ஆச்சரியங்களை அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு எதிராக கொடுத்தார். அதுவே முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தது. ஆனால் ஆடுகளத்திற்கு ஏற்ப டிஃபென்ஸ் ஆட்டத்தை நம்பாமல் ஸ்வீப் ஷாட் ஆடியதே மற்ற வீரர்கள் விக்கெட் வீழ்த்தப்பட காரணமாக இருந்தது.

ஆஸி. திட்டம்
மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கினால் இந்திய அணியை வீழ்த்தலாம் என்று கணக்கிட்ட ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் மூன்று ஸ்பின்னர்களை எப்படி விளையாடலாம் என்று முழுமையாக கணக்கிடாமல் வந்ததே தோல்விக்கு முக்கிய காரணம். இந்தப் பிரச்சினை ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பினால், சரியாக வாய்ப்புகள் உள்ளது.

கேமரூன் கிரீன்
ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் அதிரடியாக ஆடும் தன்மை கொண்டவர் என்பதால், மிடில் ஆர்டருக்கு பதிலாக தொடக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் நல்ல உயரம் இருப்பதால், அஸ்வின் மற்றும் அக்சர் படேலை கேமரூன் கிரீனால் சிறப்பாக எதிர்கொள்ள முடியும். இந்திய அணியை அட்டாக் செய்யும் போது, ஆஸ்திரேலிய அணியால் ரன்கள் சேர்க்க முடியும்.

9 நாட்கள்
ஆனால் ஒரே திட்டத்தோடு களமிறங்காமல், சூழலுக்கு ஏற்ப திட்டங்களையும் முடிவுகளையும் கேப்டன் கம்மின்ஸ் எடுக்க வேண்டும். ஆட்டம் முடிவதற்கு முன், இப்போது கூட ஆஸ்திரேலியா அணியால் கம்பேக் கொடுத்து தொடரை 2-2 என்ற முடிக்க முடியும் என்று கூறியிருந்தார். அதற்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு சரியான திட்டத்தை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கண்டறிய வேண்டும். அடுத்த போட்டிக்கு 9 நாட்கள் இடைவெளி இருப்பதால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications