2 ராஜ்ய சபா வேட்பாளர்களை அதிமுக அறிவிக்க இதுதான் காரணமா.. பரபரக்கும் பின்னணி!
2 ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கு அதிமுக சீட் வழங்க காரணங்கள் உள்ளன
Recommended Video
சென்னை: ராஜ்ய சபா வேட்பாளர்களை அதிமுக அறிவித்து 2 நாளைக்கு மேல் ஆகியும் அது குறித்த பரபரப்பு இன்னும் அடங்கவில்லை.
பாமகவுக்கு ஒன்று போக, இருக்கிற 2 ராஜ்ய சபா சீட்டுக்கள் யாருக்குதான் போக போகுதோ என்ற எதிர்பார்ப்பு கடந்த ஒரு மாதமாகவே அதிகரித்து வந்தது.
மூத்த தலைவர்கள் நிறைய பேர் சீட் கேட்டு தலைமையை நெருக்கியதாக சொல்லப்பட்டது. மற்றொருபுறம் வேட்பாளர்கள் பரிந்துரைப்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இரு தரப்பில் கருத்து மோதல் என்று சொல்லப்பட்டது. இதனிடையே, இஸ்லாமிய பிரதிநிதிக்குதான் சீட் என்றும் அநேகமாக அவர் தமிழ்மகன் உசேன் என்றும் சொல்லப்பட்டது.

அதிருப்தி + அதிர்ச்சி
கடைசியில் இந்த அனுமானங்கள் எதுவுமே இல்லாமல், முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் என்.சந்திரகேகரன் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இது மூத்த தலைகளுக்கு அதிருப்தி + அதிர்ச்சி என்றாலும், இவர்கள் இருவரையும் அதிமுக தலைமை அறிவிக்க ஒரு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. .

அதிருப்தி
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் மக்களின் அதிருப்தியை குறிப்பாக சிறுபான்மையினரின் கோபத்தை சம்பாதிக்க நேர்ந்ததாகவும், அதனால்தான் இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை அதிமுக கடந்த தேர்தலில் இழந்தது என்றும் ஒரு பேச்சு பலமாகவே எழுந்தது. இதனை சரிக்கட்டவே சிறுபான்மையினரில் ஒருவருக்கு சீட் தந்ததாக கூறுகிறார்கள்.

ஜெயலலிதா
அதேபோல, எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டது கொங்கு மண்டலம். ஜெயலலிதா இருந்தவரை இங்கு யாரையுமே நெருங்க விடாமல் வைத்திருந்தார். ஆனால் இப்போது அங்கு அதிமுக வீழ்ச்சியை சந்தித்தது. இதற்கு பொள்ளாச்சி சம்பவம் முக்கிய காரணமாக இருந்தது.

ஸ்டாலின்
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் அங்கு சென்றபோது, முதல்முறையாக அதிமுக கொடிகள் பறந்த அந்த கோட்டையில் திமுக கொடி பட்டொளி வீசி பறந்தது. வழக்கத்துக்கு மாறாக ஸ்டாலினின் பேச்சில் ஒரு தெம்பும், குஷியும் அன்று தென்பட்டது. இதனை அதிமுக தொண்டர்களே விரக்தியோடும், ஏமாற்றத்தோடும் பார்த்து கொண்டிருந்தனர்.

உறுதி
இதனையடுத்துதான், கொங்குமண்டலத்தில் இழந்த பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருந்து, கொங்கு மண்டலத்தை சேர்ந்தவருக்கு சீட் தந்துள்ளது. இழந்து போன கொங்கு மண்டலம், இஸ்லாமியர்களின் வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கு வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. இதற்காகவே இரு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடியார்
எனினும் ஒருசில விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இரு தரப்பு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர் என்பதால், தென் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. அதேபோல, இரு வேட்பாளர்களுமே எடப்பாடி தரப்புக்கு ஆதரவானவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சமாதானம்
அதிருப்திக்கு உள்ளான கேபி முனுசாமி, தம்பிதுரை, கோகுலஇந்திரா, மைத்ரேயன் போன்றவர்களுள் அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேனும் அடக்கம் என்கிறார்கள். இதில் ஒருசிலரை எடப்பாடியார் தனித்தனியே கூப்பிட்டு சீட் தர முடியாது என்பதற்கான காரணத்தை விளக்கி சமாதானப்படுத்தியதாகவும் தகவல்கள் வருகின்றன.

தமிழ்மகன் உசேன்
இது எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்மகன் உசேன் அம்மா சமாதிக்கு சென்று முக்கிய அறிவிப்பை வெளியிட போகிறார் என்ற செய்தியும் கசிந்த வண்ணம் உள்ளது. எது எப்படியோ சீட் தந்து இத்தனை நாட்கள் கடந்தும், அதற்கான பரபரப்பு இன்னும் அதிமுகவில் அடங்கவே இல்லை.
-
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications