மொத்தமாக சுருட்டிய திமுக கூட்டணி.. எப்படி கிடைத்தது இந்த பிரமாண்ட வெற்றி?
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது என்றால், அது வெற்று வார்த்தை இல்லை. புள்ளி விவரம் அப்படித்தான் சொல்கிறது.
திமுக கூட்டணி வெற்றி பெற்ற, 37 தொகுதிகளில், 35 இடங்களில் அதன் வேட்பாளர்கள் 1 லட்சத்துக்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில்தான் வென்றுள்ளனர். சிதம்பரம் மற்றும் தருமபுரி ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே குறைந்த வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளது திமுக கூட்டணி.
திமுக கூட்டணியில் 4 வேட்பாளர்கள் தொகுதியின் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை தனியாக பெற்று அசத்திவிட்டனர். 23 வேட்பாளர்கள், 50-60 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளனர். ஆக மிச்சம் உள்ள ஓட்டுக்களைத்தான் பிற கட்சியினர் பகிர்ந்து கொண்டுள்ளனர். இது பெரிய சாதனை.

தொடர் பிரச்சாரம்
"மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக திமுக தனது பிரச்சாரத்தை எப்போதோ துவங்கிவிட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக, மோடியை தாக்கி பேசி வந்தார். இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஸ்டாலின் செய்த இந்த பிரச்சாரம், மக்கள் மனதில் பதிவாகிவிட்டது" என்கிறார் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அஜய் குடவர்த்தி. வருடங்களுக்கும் மேலாக ஸ்டாலின் செய்த இந்த பிரச்சாரம், மக்கள் மனதில் பதிவாகிவிட்டது" என்கிறார் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அஜய் குடவர்த்தி.

பதில் வரவில்லை
தமிழகத்திற்கு மத்திய அரசு அளிக்கும் நிதி அளவு குறைக்கப்பட்டுவிட்டது. ஒக்கி மற்றும் கஜா புயல் பாதிப்புகளை சரியாக மத்திய அரசு கையாளவில்லை. கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிட வரவில்லை என்ற ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கு கடைசிவரை பாஜகவிடமிருந்து பதிலே வரவில்லை என்று சுட்டிக் காட்டுகிறார் அவர்.

கல்வியறிவு
மேலும் அவர் கூறுகையில், தமிழகம் கல்வி அறிவில் சிறந்து விளங்கும் மாநிலம். அனைத்து விவகாரங்களையும், அலசி ஆராய்ந்து, தேர்தல் நேரத்தில் தக்க முடிவை எடுப்பது தமிழர்கள் வழக்கம் என்று தெரிவித்தார். வட இந்தியாவில், மதத்தின் பெயரால் மக்களை பிரித்துவிடலாம். ஆனால் தமிழகத்தில் அது நடக்காது என்பதும் பாஜகவின் வட மாநில அமோக வெற்றிக்கு ஒரு காரணம். நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக கூட்டணி கட்சிகள் பேசியதும் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது. ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றுக்கு ஆளும் கூட்டணி வக்காலத்து வாங்கியது எரியும் தீயில் எண்ணையை ஊற்றியது.

சந்தர்ப்பவாத கூட்டணி
இதுபற்றி, மூத்த திமுக தலைவர் கூறுகையில், எங்கள் கூட்டணி 2 வருடங்கள் முன்பே உறுதியாகிவிட்டதால் மக்கள் மனதில் அழுத்தமாக பதிவாகிவிட்டது. ஒரே மாதிரி கொள்கைகளை கொண்ட கட்சிகள் அனைத்தும் ஒரே கூட்டணியில் இணைந்திருந்தோம். ஆனால், எதிர்க்கட்சி முகாமில் சந்தர்ப்பவாத கூட்டணிகளாக அமைந்தன. இது எங்களுக்கு மத்தியில் பலனை கொடுத்தது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி












Click it and Unblock the Notifications