நள்ளிரவில் திக்திக்.. அண்ணா சாலையில் பைக் ரேஸ் செய்த இளைஞர்கள்.. தாறுமாறாக டூவீலர்களை ஓட்டி அடாவடி
சென்னை: நள்ளிரவில் சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் இளைஞர்கள் சிலர் தாறுமாறாக பைக் ஓட்டியுள்ளனர். ஹெல்மட் கூட அணியாத அவர்கள், அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கள் பைக் நம்பர் பிளேட்களை மறைத்துக் கொண்டு இதுபோன்ற சாகசத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், போலீசார் இளைஞர்களைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு போக்குவரத்து விதிகள் இருக்கிறது. சாலைகளில் சின்ன குழந்தைகள் முதல் வயதானோர் வரை பல்வேறு தரப்பினரும் செல்வதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே போக்குவரத்து விதிகள் உள்ளன. பெரும்பாலான விபத்துகள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காமல் இருப்பதாலேயே நடக்கிறது.

பைக் ரேஸ்
போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கும் போது விபத்துகள் நடக்க வாய்ப்புகள் குறைவு. அதேநேரம் இளைஞர்கள் சிலர் போக்குவரத்து விதிகள் குறித்து துளியும் கவலைப்படாமல் சாலைகளில் தாறுமாறாக வாகனங்களை இயக்குகிறார்கள். ரேஸ் செய்ய இருக்கும் சர்க்கியூட் வேறு, பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை வேறு என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் சாலைகளில் ரேஸ் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
சென்னையில் பைக் ரேஸ்
இதுபோல இளைஞர்கள் ரேஸ் செய்வதைத் தடுக்க போக்குவரத்து போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் இளைஞர்கள் ரேஸிங் செய்வது குறைந்திருந்தது. இதற்கிடையே மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சென்னை அண்ணா சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ் செய்துள்ளனர்.
20க்கும் அதிகமான பைக்குகளில் இளைஞர்கள் ரேஸ் செய்துள்ளனர். அவர்கள் தங்கள் வாகனங்களை அதிவேகமாக ஓட்டியபடி வீலிங் செய்து, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், ஹெல்மெட் அணியாத அந்த இளைஞர்கள் ஓட்டிய வாகனங்களில் பதிவு எண்ணும் இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நள்ளிரவில் திக்திக்
சமீப காலமாகவே சென்னை அண்ணா சாலை, காமராஜர் சாலையில் இளைஞர்கள் பைக் ரேஸ் செய்யும் போக்கு அவ்வப்போது நடந்து வருகிறது.. கடந்த வாரம் இதுபோலத் தான் இளைஞர்கள் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகப் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் சில இளைஞர்கள் இதுபோல பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நம்பர் பிளேட் இல்லை
இரவு 1.30 மணியளவில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். நந்தனம் முதல் ஜெமினி மேம்பாலம் வரையிலான சாலையில் இளைஞர்கள் பைக் ரேஸ் செய்துள்ளனர். மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியுள்ளனர். ஹெல்மெட் போடாத இளைஞர்கள் இயக்கிய பைக்குகளில் நம்பர் பிளேட்டும் இல்லை எனக் கூறப்படுகிறது. சில பைக்குகளில் நம்பர் பிளேட் இருந்த போதிலும், அதை மறைத்தபடி வாகனத்தை இயக்கியுள்ளனர்.
பின்னால் பைக்கில் வந்த ஒருவர், இளைஞர்களின் பைக் ரேஸை வீடியோ எடுத்துள்ளார். அந்த காட்சிகள் தான் இணையத்தில் இப்போது வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அதேநேரம் பைக் நம்பர் தெரியாததால் சாலையில் தாறுமாறாக பைக் ஓட்டி அடாவடி செய்தது யார் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
6 மணிக்கு மேல் நோ! தேர்தல் அறிவிப்புக்கு பின் இரவில் பிரசாரம் செய்வதை தவிர்க்கும் விஜய் -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications