குணமடைந்தார் அஜிதா.. சாவிலிருந்து மீண்டு வந்து விஜய்யை முதலமைச்சர் ஆக்குவேன் என சபதம்!
சென்னை: 2026-ல் தவெக தலைவர் விஜய்யை முதல்வராக அரியணையில் ஏற்ற பலமடங்கு அதிக வேகத்தில் களப்பணியாற்ற உறுதி கொண்டுள்ளேன் என தவெகவை சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா தெரிவித்துள்ளார். தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ள அஜிதா, பல மடங்கு வேகமாகப் பணியாற்றுவதாக உறுதி பூண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அஜிதா ஆக்னல் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் நிர்வாகியாக இருந்து வரும் நிலையில், இவருக்கு சமீபத்தில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததால் தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு சென்று பனையூர் அலுவலகத்தின் முன்பாக த.வெ.க தலைவர் விஜய்யின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அஜிதாவை விஜய் சந்தித்துப் பேசாதது விமர்சனங்களைக் கிளப்பி விட்டிருந்தது. இதையடுத்து கடந்த 25 ஆம் தேதி அஜிதா ஆக்னல் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அஜிதா ஆக்னலை திமுக கைக்கூலி என தவெகவினரே விமர்சித்ததால் மனம் உடைந்து அவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அஜிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மீண்ட்ம் அஜிதா ஆக்னலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை அவசர சிகிச்சை வார்டுக்கு இடமாற்றம் செய்தனர். அங்கு அவருக்கு மருத்துவர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல் நலம் தேறி மீண்டுள்ளார் அஜிதா.
அஜிதா தற்கொலைக்கு முயன்ற நிலையில், தவெக தலைவர் விஜய் 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக மலேசியா சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்தகட்டமாக அஜிதாவின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தவெகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
இந்நிலையில் அஜிதா ஆக்னல் தமது எக்ஸ் சமூக வலைதள பதிவில், "கழகத் தோழர்கள் என் மீது கொண்ட பேரன்பினாலும் பிரார்த்தனைகளாலும் மட்டுமே பூரண குணமடைந்துள்ளேன். 2026-ல் தளபதியாரை முதல்வராக அரியணையில் ஏற்ற பலமடங்கு அதிக வேகத்தில் களப்பணியாற்ற உறுதி கொண்டுள்ளேன்... வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" எனப் பதிவிட்டுள்ளார். தனது பதிவில் தவெக தலைவர் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகளையும் டேக் செய்துள்ளார் அஜிதா.
-
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications