சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே ஜேசிபியுடன் வந்த அதிகாரிகள்.. இடித்து தரைமட்டம் ஆன கட்டிடங்கள்
சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே பெரம்பூர் நெடுஞ்சாலையில் ரயில்வே துறைக்கு சொந்தமான 6800 சதுர அடி நிலம் உள்ளது. இந்த இடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மக்கள் ஆக்கிரமித்து ஓட்டல், டீ கடை, வீடு, வணிக வளாகம் என பல்வேறு கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட்டு இருந்தனர். இந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இதன் மதிப்பு 10 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் பெரம்பூர் ரயில் நிலையம் என்பது வடசென்னை மக்களுக்கு மிகவும் முக்கியமான ரயில் நிலையமாக இருக்கிறது. இங்குதான் சென்னை சென்ட்ரல் வரும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்லும். சென்னை சென்ட்ரலில் இருந்து வெறும் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரம்பூர் ரயில் நிலையம் விரைவில் தாம்பரம் போல் நான்காவது முனையமாக அதிக வாய்ப்பு உள்ளது. அங்கு அதற்கான பணிகள் தொடங்கவும் வாய்ப்பு உள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் தற்போது பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே பெரம்பூர் நெடுஞ்சாலையில் ரயில்வே துறைக்கு சொந்தமான 6800 சதுர அடி நிலம் உள்ளது. இந்த இடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மக்கள் ஆக்கிரமித்து ஓட்டல், டீ கடை, வீடு, வணிக வளாகம் என பல்வேறு கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட்டு இருந்தது.
இது தொடர்பான வழக்கில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிமிரப்புகளை அகற்றும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதை ஏற்று ஆக்கிரமிப்பாளர்கள், காலி செய்துவிட்டனர்.
இதையடுத்து பெரம்பூர் ரயில்வே துறை டிஎஸ்பி கர்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் மாநகராட்சி அதிகாரிகள் துணையுடன் பலத்த போலீஸ் பாதுகாப்போடு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியை நேற்று தொடங்கினார்கள்.
முன்னதாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஓட்டல், டீ கடை, வீடு, வணிக வளாகம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கான மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதன் மூலம் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.10 கோடிக்கு மேல் இருக்கும் என ரயில்வே போலீசார் கூறினார்கள்.
-
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications