தொடரும் கன மழை.. நெல்லை, தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!
சென்னை: தமிழகத்தில், நெல்லை, தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே நிலையில் உள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

நேற்று காலை முதல் தற்போது வரை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி, 26 செ.மீ, திருச்செந்தூர் 24 செ.மீ மழை பெய்துள்ளது.
இதனால் முதலில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேற்று மாலை ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று 29 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி, 18 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, சென்னை, மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications