சூதானமா இருங்க.. பெரிய சூழ்ச்சி இது! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு.. திமுகவிற்கு போன ரெட் அலர்ட்!
சென்னை: அதிமுக பாஜக இடையிலான கூட்டணி முறிவுக்கு இடையில் திமுகவிற்கு முக்கியமான மெசேஜ் ஒன்று சென்றுள்ளதாம். திமுகவின் மூத்த தலைகள் சிலர் கட்சி தலைமைக்கு இது தொடர்பாக ரெட் அலர்ட் ஒன்றை கொடுத்து உள்ளனராம்.
கன்னித்தீவு கதை பலருக்கும் தெரிந்து இருக்கும். இந்த கதையை பற்றி பேசுபவர்கள் எல்லாம் சொல்வது.. கன்னித்தீவு கதை முடியவே முடியாதுங்க என்பதுதான். அந்த கன்னித்தீவு கதை போல ஆகிவிட்டது அதிமுக நிலைமை. பிரிக்க முடியாதது.. அதிமுகவும் பிரச்சனையும் என்று சொல்லும் அளவிற்கு கட்சிக்கு உள்ளேயும், கட்சிக்கு வெளியேயும் பிரச்சனை நிலவி வருகிறது.

கடந்த வருட இறுதியில் தொடங்கி இந்த வருடம் பாதி வரை அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வந்தது. ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்தது. பல கேஸ்களுக்கு பின் ஒருவழியாக இந்த யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமி வென்றார்.
உட்கட்சி மோதல் ஓவர் - கூட்டணி மோதல் ஸ்டார்ட் : உட்கட்சி மோதல் முடிந்ததும் கூட்டணி மோதல் தொடங்கியது. அதிமுக கூட்டணியை முன்பே பாமக உள்ளிட்ட கட்சிகள் முறித்துக்கொண்டு நிலையில்தான் பாஜக - அதிமுக இடையே கூட்டணி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்குன் பின் வரும் விஷயங்கள், குழப்பங்கள் காரணமாக அமைந்தது. மோதலின் முடிவாக கூட்டணியும் முறிந்துள்ளது.
1. அண்ணாமலை அதிமுகவின் ஊழல் பற்றி பேசினார். தமிழ்நாட்டை ஆண்டவர்கள் எல்லோரின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவோம் என்றார். இதை அதிமுக விரும்பவில்லை.
2. ஜெயலலிதாவை ஊழல் வாதி, சிறை சென்றவர் என்பது போன்ற பிம்பத்தில் அண்ணாமலை விமர்சனம் செய்தார். இதையும் அதிமுக ரசிக்கவில்லை.
3. ஜெயலலிதா போல நானும் பெரிய தலைவர். என் மனைவி அவருக்கு இணையவர்கள் என்றெல்லாம் அண்ணாமலை பேசினார்.
4. அண்ணா - தேவர் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் அண்ணாமலை பேசினார்.
5. இதை எதிர்த்த சிவி சண்முகத்தை கொஞ்சம் தாழ்த்தி விமர்சனம் செய்தார். ஜெயக்குமாரையும் கடுமையாக தாக்கினார்.
இதன் விளைவால் கூட்டணி இரண்டு தரப்பிலும் முறிந்தது. ஆனால் கூட்டணி முறிந்தது என்று ஜெயக்குமார் மட்டும் சொல்ல கூட்டணி முறியவில்லை என்று செல்லூர் ராஜு கூறி உள்ளார். இப்படி தலைவர்கள் மாறி மாறி பேசி வரும் நிலையில்தான்.. சரி வாருங்கள் கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுக்கலாம் என்று இன்று மாலை மீட்டிங்கிற்கு எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களை அழைத்தார். இந்த கூட்டத்தில்தான் அதிமுக - பாஜக கூட்டணியை முற்றாக முறிக்க முடிவு எடுக்கப்பட்டது.
திமுகவிற்கு எச்சரிக்கை: இந்த நிலையில்தான் திமுகவிற்கு முக்கியமான மெசேஜ் ஒன்று சென்றுள்ளதாம். திமுகவின் மூத்த தலைகள் சிலர் கட்சி தலைமைக்கு இது தொடர்பாக ரெட் அலர்ட் ஒன்றை கொடுத்து உள்ளனராம். அதன்படி அதிமுக - பாஜக முறிவு ஒரு கண்துடைப்பாக இருக்கலாம் என்று கூறியுள்ளாராம்.
பிரிவது போல பிரிந்து நல்லா இருக்கும் திமுக கூட்டணியை அதிமுக உடைக்கும். அதாவது அதிமுக தனியாக களமிறங்குவது போல இறங்கி திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்டுகளை தங்கள் பக்கம் இழுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதிமுக பிரிவது போல பாஜகவை பிரிந்து நமக்கு எதிராக சதி செய்யலாம். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும் என்ற ஆலோசனை அறிவாலயத்திற்கு சென்றுள்ளதாம். திமுகவும் வரும் நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு கூட்டணியை உறுதி செய்யும் என்கிறார்கள்.
அதாவது அதிமுகவுடன் செல்லாத வகையில் கூட்டணியை வலிமையாக்கி உறுதி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications