Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தண்ணீர் பட்டால் "ரத்தமாக மாறும் மணல்.." சட்டவிரோத சொத்து விற்பனைகள்! அடுத்தது ஆலை! பரபரப்பில் நெல்லை

தண்ணீர் பட்டாலே ரத்தம்போல மாறும் மணலை பற்றி தெரியுமா, அதை சுற்றி நடந்த சட்ட விரோத சொத்து பரிமாற்றங்களும், புதிய ஆலைக்கான எதிர்ப்பு பற்றியும் தெரியுமா. இதுதான் விஷயம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாது மணல் மற்றும் மலை ஜல்லிக் கற்கள் கனிம நிறுவனங்கள் மக்களிடையே வாங்கிய சட்ட விரோத சொத்து பரிமாற்றங்களால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டமே பரபரப்பாக இருக்கும் நிலையில், கடற்கரையோர கனிம வளத்தை பிரித்தெடுக்க தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்திற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோரங்களில் இயங்கிய தாது மணல் பிரிவு தனியார் நிறுவனங்கள், அங்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் மதிப்புள்ள தனி நபர் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளன. பெரும்பாலான இளம் தலைமுறையினர் வெளியூர்களில் தங்கி வேலை அல்லது தொழில் செய்து வரும் நிலையில், அவர்களுக்கு தெரியாமலே அவர்கள் சொத்துக்களை பெற்றோரிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்தோ, மிரட்டியோ வாங்கி குவித்துள்ளன. செட்டில்மென்ட் செய்யப்பட்ட சொத்துக்கள், உயில் எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை கூட அசால்ட்டாக வாங்கியுள்ளனர். தாமதமாக விஷயம் தெரிந்த பிறகு சொத்துக்கு உரியவர்கள் நீதிமன்றங்களை அணுகி வழக்கு தொடர்ந்ததால் நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், வள்ளியூர் உட்பட பல நீதிமன்றங்களில் இதுபோன்ற வழக்குகள் குவிந்துள்ளன. இப்படி சொத்துக்களை முறைகேடாக வாங்கியது தவறு என அதுபோன்ற விற்பனைகளை அடுத்தடுத்து ரத்து செய்து வருகின்றன நீதிமன்றங்கள்.

Red sand mining in Tirunelveli and Tuticorin districts by Tamil Nadu government opposed by many quarters

Recommended Video

    Who Is Appavu? | Radhapuram MLA to Tamilnadu Assembly Speaker | Oneindia Tamil

    இருப்பினும், வழக்குகள் காரணமாக கோர்ட்டுக்கும், தொழில் செய்யும் இடத்திற்குமாக அலைந்து வருகிறார்கள் சொத்துக்கு உரிய இளம் தலைமுறையினர். உச்சநீதிமன்றமும் தனது சமீபத்து தீர்ப்பில் உயில் எழுதி வைத்த சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இவ்வாறு முறைகேடு சொத்து விற்பனைகளும், அது தொடர்பான வழக்குகளும் பரபரத்து வரும் நிலையில், தாது மணல் பிரித்தெடுப்பதை தனியாரிடம் வழங்க முடியாது என மத்திய மாநில அரசுகள் உறுதிகாட்டியதால் தற்போது முறைகேடான சொத்து விற்பனைகளுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

    Red sand mining in Tirunelveli and Tuticorin districts by Tamil Nadu government opposed by many quarters

    இந்த நிலையில், கடற்கரையோர கனிமவளத்தை வணிக ரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த, தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், மத்திய அரசின் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சமீபத்தில் கையெழுத்தானது. அரிதாக காணப்படும் செக்கச் சிவந்த மணல் நெல்லை மாவட்டத்தின் தெற்கு பகுதிகளிலும், குறிப்பாக திசையன்விளை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் தாலுகாக்களிலும் அதிகமாக காணப்படுகிறது. இந்த மணலில் இரு அடி நடந்து சென்றாலும்போதும் தண்ணீரை காலில் ஊற்றினால் அது ரத்தம் வடிவது போன்ற தோற்றத்தில் வடியும். அந்த அளவுக்கு செக்கச் சிவந்த மண் இந்த பகுதியில் உள்ளது. கடற்கரை மணலில் கணிசமானவற்றை தனியார் தாது ஆலைகள் உறிஞ்சி எடுத்து உப்பு நீரை ஊருக்குள் ஊடுருவ விட்டுவிட்ட நிலையில், கடற்கரை மணலைதான் எடுக்கப்போகிறார்களா, பிற பகுதிகளில் செறிந்துள்ள செம்மண் எடுக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எந்த மணலை எடுத்தாலும், மேலும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று எதிர்ப்புகள் கிளம்புகின்றன.

    Red sand mining in Tirunelveli and Tuticorin districts by Tamil Nadu government opposed by many quarters

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறுகையில்: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் கடற்கரையோர கனிம வளங்களை குறிப்பாக, கார்னட், இலுமினைட், ஜிர்கான், ரூட்டைல் போன்ற கனிமங்களை பிரித்தெடுத்து சந்தைப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கடலோர கனிமங்களை பிரித்தெடுக்கவும், அதனை மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்களாக மேம்படுத்தவும், அதன்மூலம் அணுசக்தித் துறைக்கு தேவையான முக்கியமான கனிமங்கள் கிடைக்க செய்வதுடன் பிற தொழில்களுக்கு இதர கனிமங்கள் கிடைக்கப்பெற வாய்ப்பும் உண்டாகும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 52 மில்லியன் டன் தேரி மணல் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இரண்டு தொழிற்சாலைகள் குதிரைமொழி, சாத்தான்குளம் ஆகிய இடங்களில் தலா 1500 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவி ஆண்டிற்கு ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் 1075 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை குறிப்பாக கனிம வளங்களை கொண்டு அரசின் வருவாயை அதிகரிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது, தவறான முடிவாகும். தேரி மணல் மற்றும் தாது மணலில் இருந்து கனிமங்களைப் பிரித்தெரிடுக்கும் நடைமுறை அதிக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். கடற்கரையோரம் பிரித்தெடுக்கப்படும் கனிமங்களில் பல கனிமங்கள் அபாயகரமான கதிரியக்க வீச்சு கொண்டவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 5152.51 ஹெக்டேர் கொண்ட குதிரைமொழித்தேரியும், 899.08 ஹெக்டேர் கொண்ட சாத்தான்குளம் தேரியும் பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படியான ஒரு சூழல் முக்கியத்தும் வாய்ந்த இடத்தை கனிம வள வருவாய்க்காக தென்மாவட்ட கடலோரங்களின் இயற்கை அமைவுகளைச் பாதிப்படைய செய்யும் முயற்சிகள் வேதனைக்குரியது. இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    Red sand mining in Tirunelveli and Tuticorin districts by Tamil Nadu government opposed by many quarters

    பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழக அரசின் மேற்கண்ட முடிவு சூழல் பாதுகாப்பிற்கு முற்றிலும் எதிரானதாகும். ஆகவே, தமிழகத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றான தேரிப்பகுதி மற்றும் தீவிர கடலரிப்பைச் சந்தித்து வரும் தென்மாவட்ட கடலோரங்களின் இயற்கை அமைவுகளைச் சீரழிக்கும் முயற்சிகளை தமிழக அரசு கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Red sand mining in Tirunelveli and Tuticorin districts by Tamil Nadu government opposed by many quarters

    இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இயற்கை வளங்களை அழித்து அரசின் வருவாயைப் பெருக்குவதால் அடுத்து வரும் தலைமுறையினரின் வாழ்க்கை பாதிக்கும். இரு பகுதிகளிலும் உள்ள செம்மணல் தேரிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மணல் எடுப்பதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படும்.தூத்துக்குடி மாவட்டத்திலேயே நிலத்தடி நீர் மட்டம் உடன்குடி ஒன்றியத்தில்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலத்தடிநீர் மேம்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. இந் நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் முலம் இப்பகுதி முழுவதும் பாலைவனமாக மாறுவதோடு முழுமையாக விவசாயம், அதன் சார்பு தொழில்கள் என அனைத்தும் அழிந்துபோகும். தேரிக்காட்டில் உள்ள புகழ்பெற்ற அய்யனார் கோவில்கள், எண்ணற்ற குலதெய்வக் கோவில்கள், வற்றாதசுனை, குடியிருப்புகள் என அனைத்தும் பாதிக்கப்படும். எனவே இயற்கையையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+