வறண்ட சருமமா? சிவப்பு சந்தன பவுடரை வைத்து ஃபேஸ்பேக் போடுங்கள்! அப்புறம் பாருங்க!
சென்னை: சருமத்தை பாதுகாக்கும் சிவப்பு சந்தனம் பேஸ்பேக் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். சிவப்பு சந்தனம் என்னென்ன சரும பிரச்சனைகளை தீர்க்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். பப்பாளி பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சருமத்தை பாதுகாக்கும் சிவப்பு சந்தனம் பேஸ் பேக்!! அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சிவப்பு சந்தனம். இன்று சிவப்பு சந்தனத்தை வைத்து பேஸ் பேக் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.

அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி கொண்டது சிவப்பு சந்தனம். இதை தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் வியக்கத்தகு மாற்றங்கள் ஏற்படுவதை காணலாம். இன்று சிவப்பு சந்தனத்தை எதனுடன் சேர்த்து பேக் போட்டால் என்ன சரும பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.
வறண்ட சருமத்திற்கு சிவப்பு சந்தனம் மிகவும் நல்லது. தேங்காய் எண்ணெய் சரும பிரச்சனைகளை எதிர்த்து போராடும். சிவப்பு சந்தனத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி வந்தால் சில நாட்களில் நல்ல மாற்றம் ஏற்படுவதை காணலாம்.
பப்பாளி பழம் சருமத்தை தூய்மையாக்கும். பப்பாளி பழத்தை மசித்து அதில் சிவப்பு சந்தனத்தை சேர்த்து கலந்து முகத்தில் போட்டு வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகன்று விடும். இந்த பேஸ் பேக்கை தினமும் போட்டுக்கொள்ளலாம்.
பாதாம் ஆயில், தேங்காய் எண்ணெய், சிவப்பு சந்தன பவுடர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். இந்த பேக் சருமத்தை பொலிவாக்கும்.
சரும பிரச்சனைகளை போக்க ஆரஞ்சு தோல் பவுடர் 1 டீஸ்பூன், சிவப்பு சந்தன பவுடருடன் கலந்து அதில் ரோஸ்வாட்டர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும்.
சிவப்பு சத்தனம் பவுடர், வேப்பிலை பவுடர் சமஅளவில் எடுத்து கலந்து அதில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இந்த பேக் பருக்கள், பருவால் வரும் தழும்பு, கரும்புள்ளிகளை நீக்கும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் சிவப்பு சந்தனத்துடன் பால், தேன் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications