Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திரப்பதிவு பண்ண போறீங்களா.. சொத்து விற்பனையில் "வில்லங்கத்தை" மறக்காம கவனியுங்க.. ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவை வைத்தே பட்டா மாறுதல் செய்ய முடியும் என்பதால், இந்த பத்திரப்பதிவின்போது நிறைய விஷயங்களை நாம் கவனிக்க வேண்டி உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை நிலங்களை பதிவு செய்வது என்பது அவசியமானதாகும்.. இதற்காகவே தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை இயங்கி வருகிறது.

Registration Property Registration Details and These things are very important while registering the deed

இந்திய பதிவு சட்டத்தின்படி 100 ரூபாய்க்கு மேல், எந்த ஒரு சொத்தை எந்த விதத்தில் மாற்றினாலும், அது எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட துணை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.

இந்த பத்திரப்பதிவிற்கு, விற்பவர், வாங்குபவர் என 2 பேரின் முகவரி சான்றுகளும், அடையாளச் சான்றுகளும் அவசியம்.. அத்துடன், விற்பவர், வாங்குபவர்கள் ஆளுக்கொரு சாட்சியை அழைத்துவர வேண்டும் அல்லது வாங்குபவர் மட்டுமே 2 சாட்சிகளை அழைத்துவரலாம். விற்பவர், பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான ஆவணங்களின் ஒரிஜினல்கள் அனைத்தையும் வைத்திருக்க வேண்டும்.

வில்லங்கம்: அதேபோல, சொத்தின் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி பதிவு செய்யப்படுவதற்கு முன்பு, அந்த சொத்தின்பேரில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா? அந்த வீட்டின்பேரில் ஏதாவது கடன் பெறப்பட்டிருக்கின்றனவா? மூல பத்திரம் ஓனரிடம்தான் இருக்கிறதா? அடமானத்தில் உள்ளதா? என்பதெல்லாம் கண்டறிய வேண்டும்..

வில்லங்கம் சரிபார்ப்பது மிக மிக முக்கியம்.. தான் வாங்குகிற இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என்பதை வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் சரிபார்த்த பிறகே இடத்தின் விலையைப் பேசி முடிவு செய்ய வேண்டும். அதையும் வழிகாட்டி மதிப்பின்படியே பத்திரப்பதிவு செய்ய வேண்டும்.

சொத்து வாங்குபவர்: அதேபோல, சொத்தை வாங்குபவர் பெயர், தந்தை பெயர், முகவரி, சொத்தை விற்பனை செய்பவரின் பெயர், அவருடைய தந்தை பெயர், முகவரி, சொத்து தொடர்பான விவரங்கள், அதை விற்பனை செய்ய அவருக்குண்டான அதிகாரம், விற்க சம்மதித்த விவரம், சொத்து விற்பனைக்கு பரிமாறிக்கொண்ட தொகை, சாட்சிகள் பெயர், அவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

சொத்துகளையோ, நிலங்களையோ வாங்கும்போது, இடைத்தரகர்களை மட்டுமே முழுமையாக நம்பாமல், சம்பந்தப்பட்டவர்களே நேரடியாக இறங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும். எந்தப் பகுதியில் இடம் அமைந்துள்ளதோ அந்த எல்லைக்குட்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று, அந்த இடத்துக்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கு பிறகே அந்த மதிப்புக்கேற்ப முத்திரைத்தாள் வாங்கப்பட வேண்டும்.

விவரங்கள்: முத்திரைத்தாளில் சொத்து சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.. வாங்குகிற இடத்தின் அளவு, அது இருக்கும் திசை, அதைச் சூழ்ந்துள்ள விவரக்குறிப்புகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

பிறகு, முத்திரைத்தாளில் விவரங்கள் எல்லாமே சரியாக சேர்க்கப்பட்டுள்ளதா? நீக்கப்பட்டுள்ளதா? திருத்தப்பட்டுள்ளதா? இதெல்லாம் சரிபார்த்த பிறகே, பிரிண்ட் எடுக்க வேண்டும்.. அதுவும், முதலில் வெள்ளை பேப்பரில் ஒருமுறை பிரிண்ட் எடுத்து சரிபார்த்துவிட்டு, கடைசியாக முத்திரைத்தாளில் பிரிண்ட் எடுத்தால் போதும். அதேபோல, பத்திரப்பதிவு செய்யுமுன்பே, மொத்த பணத்தையும் தந்துவிடக்கூடாது. பத்திரப்பதிவு முடிந்ததும் அதற்குரிய ரசீதை கட்டாயம் கேட்டு வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

சார்பதிவாளர்: சார்பதிவாளர் அலுவலகத்தில் தந்து, உடனே பத்திரத்தையும் வாங்கிவிட வேண்டும். சூட்டோடு சூடாக பத்திரம் வாங்கியதுமே பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பித்து விட வேண்டும். இன்னும் எத்தனையோ விதிமுறைகள், வழிமுறைகள், பத்திரப்பதிவிற்கு உள்ளது என்றாலும், இதெல்லாம்கூட நாம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படையான விஷயங்கள்தான்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+