சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சித்ரா இறப்பதற்கு ஒரு மாதம் முன் என்ன நடந்தது?.. வெளியே சொல்ல முடியாத சோகம்.. தழுதழுத்த ரேகா நாயர்!

Google Oneindia Tamil News

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவை அந்த 4 பேர் கொலை செய்த போது ஹேமந்தும் அங்கிருந்தார் என நடிகை ரேகா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இதுகுறித்து ஒரு ஊடகத்திற்கு ரேகா நாயர் கூறுகையில், ஹேமந்த் திடீரென நல்லவன் மாதிரி நடிக்கிறார் என்றால் அவரது நோக்கம் அவருக்கான பாதுகாப்பு. இவர் கடனாக கோடிக்கணக்கில் பலரிடம் பெற்ற கடன்காரர்கள் காசு கேட்கிறார்கள்.

அது போல் சித்ரா மரண வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டல்களுக்கு அஞ்சியே தனக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்கிறார். இந்த முதல்வர் என்னை பார்த்துக்குவார்னு சொல்றாரே ஏன் இப்ப இருந்த முதல்வர் அன்னிக்கு எதிர்க்கட்சியில் இருந்தாரே அப்போது சொல்லியிருக்கலாமே.

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் வெளிநாட்டில் வயாகராவுடன் ஆட்டம் போட்ட அரசியல்வாதிக்கும் தொடர்பு? சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் வெளிநாட்டில் வயாகராவுடன் ஆட்டம் போட்ட அரசியல்வாதிக்கும் தொடர்பு?

நண்பர்கள்

நண்பர்கள்

அன்றும் ஹேமந்திற்கு திமுகவில் நண்பர்கள் இருந்தார்கள். அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஹேமந்த் தான் பெண்களை சப்ளை செய்து கொண்டிருந்தார். இதில் சித்ராவும் மாட்டியுள்ளார். இத்தனை நடந்தும் சித்ரா இறந்த கவலையே இல்லாமல் ஹேமந்த் இருக்கிறார்.

ரேகாவை பார்க்க வேண்டும்

ரேகாவை பார்க்க வேண்டும்

கடந்த வாரம் பப்பில் போய் யாரிடமோ "நான் ரேகாவை பார்க்க வேண்டும்" என சொல்லியுள்ளார். நான் டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் கொடுத்துள்ளேன். என்னை வந்து சந்தித்தால் உடனே தகவல் கூறுமாறு சொல்லியுள்ளார்கள். ஹேமந்த்திற்கு தான் நியாயவாதி என இல்லாத ஒன்றை நிரூபிக்க வேண்டும். இன்னொன்று பணம் வேண்டும்.

ஆளும் கட்சி

ஆளும் கட்சி

இதற்காக ஆளும் கட்சியை கைக்குள் போட்டுக் கொண்டு எதிர்க்கட்சி மீது புகார் கொடுத்துள்ளார். சித்ராவின் மரணம் தற்கொலை கிடையாது. ஹேமந்துடன் சேர்ந்து 4 பேர் கொலை செய்துள்ளார்கள். அவர்கள் யாரென ஹேமந்திற்கு தெரியும். மாஜி எம்எல்ஏவுக்கும் தொடர்பு என ஹேமந்த் சொல்கிறார். ஆனால் இந்த கொலையில் அந்த மாஜிக்கு தொடர்பில்லை.

நெருக்கம்

நெருக்கம்

ஹேமந்துடன் நெருக்கமாக இருந்ததால் கருத்தரித்த பெண்கள் இவர் காலில் விழுந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார்கள். ஆனால் முடியவே முடியாது என சொல்லிவிட்டார். சித்ராவின் மரணத்தில் 20 சதவீதம் மட்டுமே ஹேமந்தின் பங்கு உள்ளது. மீதமுள்ள 80 சதவீதம் அந்த 4 பேருக்கு மட்டுமே இருக்கிறது. அவர்களை ஹேமந்த் காட்டிக் கொடுக்க வேண்டும்.

தாம்பரம்

தாம்பரம்

தாம்பரத்தில் ஒரு வீடு வாங்கும் போது சித்ரா பெயரில் கடன் வாங்கினார் ஹேமந்த். அப்போது அந்த கடனை அடைக்க முடியாமல் பிரச்சினைகள் வந்தது. அப்போது சித்ராதான் சமாளித்தார். அப்படியிருக்கும் போது சித்ராவை அந்த 4 பேர் கொலை செய்த போது என்ன செய்துக் கொண்டிருந்தார்.

சித்ரா

சித்ரா

சித்ரா ஷூட்டிங் முடித்துவிட்டு வெளியே வந்த போது அரை மணி நேரத்தில் ஒரு சம்பவம் நடக்கும் போது ஹேமந்திற்கு எப்படி தெரியாமல் இருக்கும். ஒன்றரை ஆண்டுகளாக சித்ராவுக்கு ஓயாமல் போன் செய்து எங்க இருக்கே, எப்படி வருவ, எந்த டிரஸ் போட்டிருக்கே, எந்த வழியா வருவ என தொடர்ந்து நச்சரித்த ஹேமந்திற்கு அரை மணி நேரத்தில் நடந்த சம்பவத்தை தடுத்து அழைத்து வர தெரியாதா?

சித்ராவின் மரணம்

சித்ராவின் மரணம்

நான் மீண்டும் சொல்கிறேன் சித்ராவின் மரணம் தற்கொலை அல்ல, கொலைதான். ஹேமந்தின் நண்பர் ரோஹித்தை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்தார். அது போல் நாளை என்னையும் கொலை செய்ய முயற்சிக்கலாம். நியாயத்திற்காக என் உயிர் போனால் எனக்கு கவலை கிடையாது. சித்ரா இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அவள் இருந்த நிலைமை வெளியே சொல்ல முடியாது. ஆனால் பிரேத பரிசோதனை செய்திருந்தால் உண்மை தெரிந்திருக்கும் என்றார்.

English summary
Actress Rekha Nair says that 4 people are involved in TV serial actress Chithra death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X