என்னா மனுஷன்யா.. அட்டாக் நியூஸ் வந்த சில நிமிடத்தில் Operation Sindoor பெயருக்கு உரிமை கேட்ட அம்பானி
சென்னை: ஆபரேஷன் சிந்தூர் நடந்த சில மணி நேரங்களில் Operation Sindoor பெயரின் ட்ரேட் மார்க்கிற்கு முகேஷ் அம்பானி விண்ணப்பம் செய்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) உட்பட நான்கு விண்ணப்பதாரர்கள் 'ஆபரேஷன் சிந்தூர்' பெயரை பதிவு செய்ய வர்த்தக முத்திரை பதிவேட்டை அணுகியுள்ளனர் என்று economictimes, live law உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்தியா சார்பாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாம்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.

இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை.
இது போக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். பாராமுல்லா, பூஞ்ச், ரசோரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் பலியாகினர். இதில் ஒரு பெண், 2 குழந்தைகள் அடங்குவர். மேலும் 38 பேர் காயமடைந்தனர். இதில் பூஞ்ச் மாவட்டம் தான் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இங்கு 7 பேர் பலியாகி உள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் பெயர்
பஹல்காம் தாக்குதலில் 26 இந்தியர்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் பெண்கள் பலர் கணவர்களை இழந்தனர். இதை பறைசாற்றும் விதமாக குங்குமத்தை இழந்ததற்கு பழி தீர்க்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயர் வைக்கப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஆபரேஷன் சிந்தூர் நடந்த சில மணி நேரங்களில் Operation Sindoor பெயரின் ட்ரேட் மார்க்கிற்கு முகேஷ் அம்பானி விண்ணப்பம் செய்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) உட்பட நான்கு விண்ணப்பதாரர்கள் 'ஆபரேஷன் சிந்தூர்' பெயரை பதிவு செய்ய வர்த்தக முத்திரை பதிவேட்டை அணுகியுள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் , முகேஷ் சேத்ராம் அகர்வால், ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் கமல் சிங் ஓபர் மற்றும் அலோக் கோத்தாரி ஆகிய நான்கு விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பம் செய்துள்ளது. கல்வி மற்றும் பொழுதுபோக்கு சேவைகளை உள்ளடக்கிய வகுப்பு 41 இன் கீழ் 'ஆபரேஷன் சிந்தூர்' வர்த்தக முத்திரையின் மீதான வர்த்தக முத்திரை உரிமைகளை சொந்தமாக்க தனித்தனி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.
அதாவது இந்த பெயரில் நிறுவனம், கடைகள், சினிமா வெளியிட, புத்தகம் வெளியிட, உடைகள் வெளியிட தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்பதை உறுதி செய்ய டிரேட் மார்க் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.
வர்த்தக முத்திரை பதிவேட்டின் வலைத்தளத்தின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
நிறுவனம் "பொழுதுபோக்கு, தயாரிப்பு, விளக்கக்காட்சி மற்றும் ஆடியோ, வீடியோ, ஸ்டில் மற்றும் நகரும் படங்கள் மற்றும் டாகுமெண்டரி; மின்னணு வெளியீட்டு சேவைகள் உள்ளிட்ட வெளியீட்டு சேவைகள்" என்ற பிரிவின் கீழ் பதிவு செய்ய முயன்றுள்ளது.
அதாவது இந்த பெயரில் சினிமா வெளியிட, புத்தகம் வெளியிட, உடைகள் வெளியிட தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்பதை உறுதி செய்ய டிரேட் மார்க் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications