சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தினம் 1.5 ஜிபி இன்டர்நெட் வசதி.. நிறைய அவுட் கோயிங் அழைப்புகள்.. ஜியோ அதிரடி ஆஃபர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ரிலையன்ஸ் ஜியோ செல்போன் நெட்வொர்க் சேவையில் களமிறங்கியதுமே பெரிய விலை குறைப்பு புரட்சிகளை நடத்திக் காட்டியது. எனவே பெரும் வாடிக்கையாளர்கள் கூட்டம் சேர ஆரம்பித்தது.

இப்போது லாக்டவுனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளதால் இணையதள தேவை அதிகரித்து வருகிறது. இதற்கு உதவும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ, இணையதள சேவையை அதிகமாக வழங்கும், திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

தினமும் 1.5 ஜிபி அளவுக்கான இணையதள வசதியை வழங்கும் ஜியோவின் ப்ரீபெய்டு திட்டங்கள் சிலவற்றை இதில் பார்க்கலாம். உங்களின் இணைய தேவையை பூர்த்தி செய்ய இவை உங்களுக்கு உதவக் கூடும்.

சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கவுண்டர்கள் திறப்பு.. முன் பதிவு தொடங்கியது சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கவுண்டர்கள் திறப்பு.. முன் பதிவு தொடங்கியது

வருடாந்திர பிளான்

வருடாந்திர பிளான்

ஜியோ மூன்று வகை, வருடாந்திர ப்ரீபெய்ட் பிளான்களை வைத்துள்ளது. அதில் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ரூ .2121 கட்டணம் கொண்டது. ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. எனவே மொத்தம் 504 ஜிபி டேட்டா வழங்குகிறது. டேட்டா நன்மைகளைத் தவிர, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், ஜியோ நம்பர்களுக்கு அன்லிமிடெட் கால் வசதி, ஜியோ அல்லாத நம்பர்களுக்கு 12000 நிமிடங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஜியோ ஆப்கள் பல இலவசமாக கிடைக்கும்.

காலாண்டு பிளான்

காலாண்டு பிளான்

ஜியோ காலாண்டு பிளானை ரூ. 555 க்கு வழங்குகிறது, இதுவும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா கொண்டதுதான். ப்ரீபெய்ட் திட்டங்கள் 84 நாட்கள் செல்லுபடியாகும். மொத்தம் 126 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. டேட்டாவுடன் ஜியோ நம்பர்களுக்கு அன்லிமிடெட், ஜியோ அல்லாத நம்பர்களுக்கு 3,000 நிமிடங்கள் வரை இலவசம். பல ஜியோ ஆப்கள் இலவசம்.

56 நாட்கள் திட்டம்

56 நாட்கள் திட்டம்

இந்த பிரிவில் ஜியோ வழங்கும் மற்றொரு ப்ரீபெய்ட் பிளானின் கட்டணம் ரூ .399. ப்ரீபெய்ட் திட்டம் மொத்தம் 84 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 56 நாட்கள் செல்லுபடியாகும். டேட்டா நன்மைகளுடன், இந்த திட்டம் ஜியோ நம்பர்களுக்கு அன்லிமிடெட், ஜியோ அல்லாத நம்பர்களுக்கு 2,000 நிமிடங்கள் வரை அவுட் கோயிங் கால்களை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக கொடுக்கிறது. ஜியோ ஆப் சில இலவசம்.

குறைந்த சந்தா

குறைந்த சந்தா

1.5 டேட்டா திட்டத்திலேயே மிக குறைந்த சந்தா கொண்ட பிளான், ரூ 199 ப்ரீபெய்ட் திட்டம்தான். ஏர்டெல் மற்றும் வோடபோனில் இதுபோன்ற பிளானுக்கு ரூ .249 செலவாகும் என்பதால் இந்த திட்டம், இருப்பதிலேயே மலிவானது. 199 ப்ரீபெய்ட் பிளான் வேலிடிட்டி 28 நாட்களாகும். மொத்தம் 84 ஜிபி டேட்டா கிடைக்கும். ஜியோ நம்பர்களுக்கு இலவச அழைப்பு, ஜியோ நம்பர்களுக்கு 1,000 நிமிடங்கள் வரை கால் செய்ய அனுமதி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களை வழங்குகிறது இந்த திட்டம்.

English summary
Reliance Jio has a wide range of prepaid plans to choose from. Jio came up with many new prepaid plans like prepaid plans by Jio that offer 1.5GB data per day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X