Jio Recharge: மலிவு விலை பிளான் பயன்படுத்துவோரும் அன்லிமிட்டெட் 5G டேட்டா பெறலாம்.. சூப்பர் திட்டம்!
சென்னை: 2 ஜிபிக்கு குறைவான தினசரி டேட்டா வழங்கும் பிளான்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தும் வகையில் சிறப்பு வவுச்சரை வழங்குகிறது ஜியோ நிறுவனம். வெறும் 601 ரூபாயில் ஆண்டு முழுவதும் அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவை பெறலாம்.
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை அன்லிமிட்டட் ஆக வழங்கி வருகின்றன. எனவே, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 5ஜி ஸ்மார்ட் போன்களுக்கு மாறி உள்ளனர். 5ஜி அன்லிமிட்டட் இணைய வசதி மூலமாக, நாள் முழுக்க ஓடிடி தளங்களில் படங்கள், வெப் சீரிஸ்கள் பார்க்கலாம், கிரிக்கெட் மேட்ச் பார்க்கலாம் என்பதால் பலரும் 5ஜி மொபைல்களுக்கு மாறி உள்ளனர்.

ஜியோ பிளான்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவான திட்டங்களை வழங்கி வருகிறது. தினமும் 2 ஜிபி மற்றும் அதற்கு மேல் டேட்டா பிளான்களை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இலவச 5ஜி சேவை வழங்கி வருகிறது ஜியோ. 1.5 ஜிபி தினசரி டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக ஜியோ குறைந்த விலையில் வரம்பற்ற 5G டேட்டா வழங்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ.601 மட்டுமே. இந்த திட்டத்தைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.
ஜியோவின் இந்த ப்ரீபெய்டு திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5G டேட்டா வழங்கப்படுகிறது, ஆனால் இதனுடன், வாடிக்கையாளர்கள் ஜியோவின் ஒரு நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது என்னவென்றால் 1.5 ஜிபி தினசரி டேட்டா பேக்கை முன்கூட்டியே ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.
ஸ்பெஷல் வவுச்சர்கள்
ஜியோ இந்த பிளானில் ஒரு வருடத்திற்கு 12 வவுச்சர்களை வழங்கும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.601 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும்போது, உங்களுக்கு 12 வவுச்சர்களின் வசதி வழங்கப்படும். அதாவது, நீங்கள் ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு வவுச்சரைப் பயன்படுத்தலாம். வவுச்சரைப் பெற, நீங்கள் My Jio ஆப்க்கு செல்ல வேண்டும். அங்கு வவுச்சர் பிரிவில் வவுச்சரை Redeem செய்து அன்லிமிட்டட் 5G டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவை வழங்கும் பிளான் என்றால் ரூ.51, இரண்டு மாதங்களுக்கு 101, மூன்று மாதங்களுக்கு ரூ.151 விலையில் வவுச்சரை ரெடீம் செய்து கொள்ளலாம். ரூ.51 மதிப்புள்ள டேட்டா வவுச்சர் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் இந்த வவுச்சர்களை ஒவ்வொரு மாதமும் அல்லது 2, 3 மாதங்களுக்கு ஒருமுறை My jio ஆப்பில் இருந்து ரெடீம் செய்துகொள்ள வேண்டும். ரூ.601 டேட்டா வவுச்சரை கிஃப்ட்டாக எந்தவொரு ஜியோ யூசருக்கும் அனுப்பவும் முடியும். இந்த வவுச்சரை MyJio account சென்று உங்கள் நண்பர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ கிஃப்ட் செய்ய முடியும்.
அன்லிமிட்டட்
இந்த பிளானில் பயனர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற முடியும் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி கூடுதல் 4ஜி டேட்டாவையும் பெற முடியும். அதோடு நீங்கள் ஏற்கனவே ரீசார்ஜ் செய்திருக்கும் திட்டத்தின் அடிப்படையில் தற்போதைய இந்த திட்டம் செல்லுபடியாகும். ஏற்கனவே 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்திருந்தால் மட்டுமே ரூ.601 திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய முடியும்.
யார் யார் இந்த பிளானை பயன்படுத்தலாம்?
ஜியோவின் அன்லிமிட்டட் 5ஜி ரீசார்ஜ் திட்டத்தை ரூ.199, ரூ.239, ரூ.299, ரூ.319, ரூ.329, ரூ.579, ரூ.666, ரூ.769 மற்றும் ரூ.899 போன்ற பல பிரபலமான ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்திருப்பவர்கள் கூடுதல் 5ஜி அன்லிமிட்டட் டேட்டாவை பெற இந்த திட்டத்தைப் பயன்படுத்தலாம்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications