கொடூரத்தின் உச்சம்.. நெல்லை, தூத்துக்குடி செல்லும் நிவாரணப் பொருட்கள் வழிப்பறி! உடனே வந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் தமிழ்நாட்டில் கொட்டித்தீர்த்த பெரு மழையின் தாக்கம் காரணமாக 4 மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி இருக்கும் நிலையில், அங்கு நிவாரண பொருட்களுடன் செல்லும் வாகனங்களை வழிமறித்து பொதுமக்கள் பறிப்பதாக சமூக ஆர்வலர் வாசு சுமதி பதிவிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், "திருநெல்வேலி தூத்துக்குடி பாதையில் தற்காலிகமாக சரி செய்யப்பட்ட நெடுஞ்சாலையில் இயக்கப்பட்ட ஐந்து பேருந்துகளையும், கோரம்பள்ளம், அந்தோனியார்புரம் மக்கள் நிவாரணம் கேட்டு வழிமறித்து நிறுத்தி விட்டனர்.

Relief goods going to Nellai and Tuticorin are hijacked

தூத்துக்குடி நெல்லை நெடுஞ்சாலை மறவன் மடத்தில் மரத்தை வெட்டி போட்டு குடிநீர், மின்சாரம் வழங்க வேண்டி மறியல் செய்கிறார்கள். தூத்துக்குடி பொன்னாங்குறிச்சி மக்கள் நிவாரண பொருட்கள் ஏற்றி வந்த லாரியை இடைமறித்து அதிலுள்ள பாய் போர்வை போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டு லாரியை அனுப்பி வைத்தனர். மக்கள் நிலைமை நன்றாக புரிகிறது, ஆனால் அவர்களுக்கு உதவி செய்ய அவர்கள் அல்லவா நமக்கு உதவி செய்ய வேண்டும்.

இதே நிலைமையை கஜா புயலின் போது வேதாரண்யத்தில் கண் கூடாக பார்த்தேன். ஏதோ சில பெரிய தலைகள் நமக்கு அப்போது பின்புலத்தில் இருந்ததால் தப்பித்தோம். நண்பர்களே இது பேரழிவு, அரசு செய்ய வேண்டியதை செய்யும். அதுவரை தன்னார்வலர்களை களத்தில் சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள் என்று இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோல் சமூக ஆர்வலர் கிரித்திகா தரண் வெளியிட்ட பதிவிலும், "பொருட்கள் பறிப்பு அரசுக்கு தெரிவிங்க. தூத்துகுடியில் திட்டமிட்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த மக்களை??? நிறுத்தி வைத்து பறிக்க வைக்கிறார்கள். இப்பொழுது போலிஸ் பாதுகாப்புடன் செல்கிறோம். இது போகும் வழியில் பல இடங்களில் நிற்கிறது. தன்னார்வலர்களுக்கும் ஆபத்து. போலிஸ் தீவிர நடவடிக்கையில் இருந்தாலும் மக்கள் என நினைத்து விடுவார்கள்.

அங்கு பின்புலமாய் சில ஸ்கார்ப்பியோக்களால் அடையாளம் கண்டு கொண்டேன். இதை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்குவதும் பொருட்கள் உரிய இடத்தில் கொண்டு சேர்க்க உதவனும். டாட்டா ஏசில் போலிஸ் இருவர். என்ன சோதனை? பத்து பேர் சேர்ந்து தெருவில் நிற்காமல் தடை செய்வது முக்கியம்." என்று குறிப்பிட்டு இருந்தார். இப்பதிவை பகிர்ந்து உள்ள வாசு சுமதி, "இது அரசுக்கு அவப்பெயர் வராமல் இருக்க செய்கிற ஒரு நற்செயலாக இருந்தாலும், இது பத்தாது - இன்னும் தீவிரம் தேவை." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+