ஆதார் கார்டு இருக்குல்ல? ரேஷன் அட்டை ரத்தாகிடும்.. இனி எதுவுமே வாங்க முடியாது.. இன்றே கடைசி பாருங்க
சென்னை: மோசடிகளைத் தடுக்கும் நோக்கத்திலேயே ரேஷன் கார்டில் கேஒய்சி சரிபார்ப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதையடுத்து, ரேஷன் கார்டில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த கேஒய்சி செய்ய உத்தரவு பிறப்பிக்கக்கப்பட்டிருக்கிறது.. இந்த பணியை செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.
ரேஷன் கார்டு என்பது வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் அட்டை ஆகும். இந்த ரேஷன் அட்டையை வைத்து ரேஷன் கடைகளில், இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..
உதவிகள்: இதுமட்டுமில்லாமல், பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன..

ரேஷன் அட்டைகள்: அந்தவகையில், தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 7 கோடியே 2 லட்சம் பயனாளிகள் ரேஷன் வாங்குகின்றனர்... இந்த ரேஷன் கார்டுகள் இருந்தால்தான், அரசின் உதவிகளை எளிதாக பெற முடியும்... அதேபோல, பொங்கல் பரிசு தொகுப்பு, தீபாவளி பரிசு தொகுப்பு, வெள்ள நிவராணம் பெறுவதற்கும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
அதனால்தான், ரேஷன் கார்டுகளில் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், போலி ரேஷன் அடைகளின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துவிட்ட நிலையில், மோசடிகளும் பெரிய அளவில் நடப்பாக தெரிகிறது. இந்த மோசடிகளை தடுத்து, அரசின் திட்டங்களும், உதவிகளும், மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே ரேஷன் கார்டில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த கேஒய்சி செய்ய உத்தரவு பிறப்பிக்கக்கப்பட்டது
விரிவாக்கம்: Know Your Customer என்பதுதான் Kyc-யின் விரிவாக்கமாகும்.. கேஒய்சி என்பது தங்களது அடையாளங்களை சமர்பிப்பதாகும்... எனவே, ஆதார் நம்பர், செல்போன் நம்பர், வீட்டு முகவரி தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் அல்லது ரேஷன்கடைகளில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைன் என்றால், மாநிலத்தின் உணவுத்துறை அல்லது ரேஷன் கார்டு சேவையின் https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் நுழைய வேண்டும்.. அங்கு இகேஒய்சி இணைப்பை காணலாம். அதில் ரேஷன் கார்டில் உள்ள பதிவு எண் மற்றும் செல்போன் நம்பரை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். பிறகு நீங்கள் பதிவு செய்திருந்த செல்போன் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும் நிலையில் அதனை பதிவிட வேண்டும்.
ஆதார் நம்பர்: பிறகு ஆதார் நம்பரை பதிவிட்டு ரேஷன் கார்டுடன் இணைத்துவிட்டு ஆதார் மற்றும் ரேஷன் இரண்டிலும் உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியான முறையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அது ஆதாரருடன் இணைந்த பிறகு கைரேகை அல்லது ஓடிபி விபரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது இகேஒய்சி சரிபார்ப்பு முடிந்து விடும்.
ஒருவேளை இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது ரேஷன் கடைகளுக்கும் சென்று இந்த செயல்பாட்டினை முடிக்கலாம். அல்லது மத்திய அரசின் இ்ந்த https://nfsa.gov.in/sso/frmPublicLogin.aspx இணையதளம் மூலமாகவும் தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இன்றுடன் கடைசி: ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினரின் கேஒய்சி சரிபார்ப்பு முடிக்கப்படவில்லையானால், ரேஷன் கார்டில் இருந்து அவர்களுடைய பெயர் நீக்கப்படும். அதன் பிறகு அவருடைய பங்கில் ரேஷன் பொருட்களை இனி வாங்க முடியாது. ரேஷன் கார்டும் அவர்களுக்கு நீக்கப்பட்டுவிடுமாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications