டெல்லியில் நடைபெற்ற மதநல்லிணக்க மலர்ப் பேரணி! தமிழ்நாடு கலைக்குழுவுக்கு முதல் பரிசு!
சென்னை: டெல்லியில் நடைபெற்ற மதநல்லிணக்க மலர்ப் பேரணியில் தமிழ்நாடு கலைக்குழுவினருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மத நல்லினக்கத்தினை வலியுறுத்தி டெல்லியில் மலர்ப் பேரணி நடத்தப்படுவது வழக்கமாகும்.

டெல்லியில் மத நல்லினக்கத்தினை வலியுறுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் "மத நல்லினக்க மலர்ப் பேரணி" மற்றும் கலை நிகழ்ச்சிகள் கடந்த வாரம் அன்று மேஹ்ருளி பகுதியில் நடைபெற்றது.
அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருந்திட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இம்மலர்ப் பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பாக 25 கலைஞர்கள் கொண்ட கலைக் குழுவினர் அலங்கார மலர்ப் பதாகைகள் தாங்கி, கலை நிகழ்சிகளை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியின் பார்வையாளர்களை, தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையக் குழுவினர் வழங்கிய கலை நிகழ்ச்சி மிகவும் கவர்ந்த வண்ணமாக அமைந்தது. தமிழ்நாடு கலைக்குழுவினருக்கு அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இவ்விழாவில், டெல்லி முதலமைச்சர் சார்பில் கலந்துகொண்ட டெல்லி மேஹ்ருளி சட்டமன்ற உறுப்பினர் நரேஷ் யாதவ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களை பாராட்டினார்.
கடந்த ஆண்டுகளில் பங்குபெற்ற மாநிலத்தின் கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு பங்கேற்புச் சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 2022 தமிழ்நாடு கலைக்குழுவிற்கு முதல் பரிசு பெற்றதாக தேர்வுக் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications