கப்பலேறிய ஆபீசரின் மானம்.. ஆபாச வீடியோவில் இருப்பது யார் தெரியுமா? "தங்க பிஸ்கட்" நடிகை நினைவிருக்கா
சென்னை: கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்கப் பிரிவு போலீஸ் டிஜிபியாக உள்ள ராமச்சந்திர ராவ் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.. டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவ், பெண்கள் விஷயத்தில் இப்படியெல்லாம் நடந்து கொண்டாரா? என்ற அதிர்ச்சியில் அம்மாநில காவல்துறை வட்டாரம் உள்ளது. கைதாகி உள்ள இந்த அதிகாரி யார் தெரியுமா? இவரது பெயர் ஏற்கனவே ஒரு நடிகையின் கேஸில் அடிபட்டது நினைவிருக்கா? அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை ரன்யா ராவ்.. இவருக்கு 33 வயதாகிறது.. கடந்த 2014ம் ஆண்டு, நடிகர் கிச்சா சுதீப்பின் மாணிக்யா என்ற படத்தில், ஹீரோயினாக அறிமுகமானவர்.. முதல் படத்திலேயே கன்னட ரசிகர்களின் ஆதரவை பெற்றிருந்த ரன்யா ராவ், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2016ல் வெளியான "வாகா" என்ற படத்தில் ஹீரோயினாக ரன்யா ராவ் நடித்திருந்தார்.

பிரபல நடிகை
கடந்த வருடம் துபாயிலிருந்து பெங்களூரு வந்த நடிகை ரன்யா ராவ், உடலெங்கும் தங்க நகைகளை அணிந்து வந்ததால் அதிகாரிகளின் சந்தேகத்திற்கு உள்ளானார். விமான நிலைய சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தமாக சுமார் 14.80 கிலோ தங்கம் சட்டவிரோதமாக இந்த நடிகை கடத்தி வந்தது உறுதியானது.
தன்னுடைய தொடையில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தார்... வெறும் 15 நாட்களில் அவர் நான்கு முறை துபாய்க்கு சென்றிருந்ததுதான் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை தந்தது..
உடம்பெல்லாம் நகைகள்
கோடிக்கணக்கான நகைகளை நடிகை அணிந்தும், துணிகளுக்குள் தங்க கட்டிகளை மறைத்தும் கடத்தி வருகிறார் என்றால், இந்த கடத்தல் பின்னணியில் மேலும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் DRI அதிகாரிகள் விசாரணை நடத்தினர்..
அப்போது இந்த நடிகையை தப்பிக்க சில அதிகாரிகள் மூலம் முயற்சி செய்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகின.. மேலும், துபாயில் இருந்து பெங்களூருவிற்கு வந்தபோது, தன்னை கர்நாடகா டிஜிபியின் மகள் என்று கூறி, போலீஸாரை காவலுக்கு வரும்படியும் அழைத்துள்ளார்.. இது மேலும் போலீசாருக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது..
வளர்ப்பு மகள்
நடிகையை விசாரணைக்கு உட்படுத்தியபோதுதான், கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்கப் பிரிவு போலீஸ் டிஜிபியாக உள்ள ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகள்தான் நடிகை ரன்யா ராவ் என்பது தெரியவந்தது..
அதுமட்டுமல்ல, நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தி வந்த போது விமான நிலையத்திற்கு, போலீஸ் வாகனத்தை டிஜிபியான அவரது அப்பா ராமச்சந்திர ராவ் அனுப்பி வைத்திருந்தார். இதனால் தங்கம் கடத்தி வந்த ரன்யா ராவை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்யாமல் பலமுறை அனுப்பி வைத்துள்ளனர்.
பறிபோன ப்ரோமோஷன்
மகளின் கள்ளக்கடத்தலுக்கு தந்தையே உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது. இதனால் ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார்... மாதக்கணக்கில் அவருக்கு பணி ஒதுக்கப்படாமல் இருந்தது, அதன் பிறகு தான் குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு டிஜிபியாக ராமச்சந்திர ராவ் நியமிக்கப்பட்டார். இந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கியதால் மாநில போலீஸ் டிஜிபி என்ற தலைமை பொறுப்புக்கான வாய்ப்பு இருந்தும் அது அவருக்கு அப்போது கையை விட்டு போய்விட்டது நினைவிருக்கலாம்..
இந்த நிலையில்தான் டிஜிபி ராமச்சந்திர ராவ், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோக்கள் சிக்கி பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது..
கட்டிப்பிடித்து முத்தம்
மொத்தம் 3 ஆபாச வீடியோக்கள் உள்ளன.. இதில், 2 வீடியோக்களில் டிஜிபி ராமச்சந்திர ராவ், யூனிபார்மிலேயே தன்னுடைய லீலையை அரங்கேற்றி உள்ளார்.. ஆனால் 3 வீடியோக்களில் உள்ள பெண் ஒருவரா? அல்லது வேறு வேறு பெண்களா தெரியவில்லை.. அந்த பெண்களை யாரும் பலவந்தப்படுத்தவில்லை, அவர்களாகவே விருப்பப்பட்டு அதிகாரியுடன் பழகுவது போல தெரிகிறது...
இப்படி ஒரு வீடியோ வெளியானதுமே இதனை ராமச்சந்திர ராவ் மறுத்தார்.. பிறகு 8 வருட பழைய வீடியோ என்றார்.. பிறகு அந்த வீடியோக்கள் எதுவுமே உண்மை இல்லை, சித்தரிக்கட்டவை, யாரோ சதி செய்கிறார்கள் என்றார்.. இப்படி மாற்றி மாற்றி பேசிய நிலையில், அவரை துறை ரீதியாக சஸ்பெண்டு செய்துள்ளனர்..
இன்னும் 4 மாதங்களில் ரிடையர் ஆக போகிறாராம் டிஜிபி ராமச்சந்திர ராவ்.. ஆனால் அதற்குள் இப்படியொரு ஆபாசத்தில் சிக்கி உள்ளது காவல்துறை வட்டாரத்தை அதிர வைத்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications