தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம்.. புதிய தலைவர் யார்? அடுத்த வாரம் அறிவிக்கிறது டெல்லி மேலிடம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவது உறுதியாகி உள்ள நிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்கின்றன டெல்லி தகவல்கள். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் புதிய பாஜக தலைவர்கள் தொடர்பான அறிவிப்பு மொத்தமாக வெளியாகக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெறுவது உறுதியாக உள்ளது.

bjp annamalai

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பாஜகவுடன் கூட்டணி அமைக்க, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நீக்க வேண்டும் என அதிமுக தரப்பில் நிபந்தனை வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து டெல்லிக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை வரவழைக்கப்பட்டார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை, அமித்ஷாவிடம் பேசிய அனைத்து விவரங்களையும் சொல்ல முடியாது; நான் ஒரு சாதாரண பாஜக தொண்டனாக கூட இருக்கிறேன் என்று கூட சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டின் நிலவரம் என்ன என்பது குறித்த துல்லியமான தகவலை டெல்லி மேலிடத்தில் தெரிவித்துவிட்டேன். இனி டெல்லி மேலிடம்தான் முடிவு எடுக்கும் என்றார்.

இதனைத் தொடர்ந்தே தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவது உறுதி என தகவல்கள் பரவின. மேலும் தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவரான நயினார் நாகேந்திரனை நியமிக்கவும் டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது, பாஜகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இணக்கமான சூழ்நிலை இருக்க வேண்டும். அண்ணாமலை, பாஜக தலைவராக இருந்தால் இந்த இணக்கம் இருக்காது. பாஜகவுக்கு புதிய தலைவர் ஒருவர் இருந்தால் இது சாத்தியமாகும். அதுவும் நயினார் நாகேந்திரன் போன்ற அதிமுகவுடன் மிக இணக்கமாக ஒருவர், பாஜக தலைவராக பதவியில் இருந்தால் கூட்டணியும் சுமூகமாக இருக்கும் என்கின்றன.

இதனிடையே பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு பதிலாக புதிய தேசிய தலைவரை அக்கட்சி அறிவிக்க இருக்கிறது. அதேபோல தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் புதிய பாஜக தலைவர்களும் அறிவிக்கப்பட உள்ளனர். பாஜக மேலிடம் அடுத்த வாரம் இந்த அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+