ஊட்டி ரயில் நிலையத்தில் சலசலப்பை ஏற்படுத்திய இந்தி பேனர்.. ரயில்வே அமைச்சருக்கு ஆ.ராசா கடிதம்
சென்னை: ஊட்டி ரயில் நிலையத்தில் இந்தியில் நிறுவப்பட்டுள்ள பதாகைகள், தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளன என்றும், உடனடியாக அவற்றை அகற்ற அறிவுறுத்த வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக எம்.பி ஆ.ராசா.
ரயில் நிலையங்களில் இந்தி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நீலகிரி எம்.பி ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

பழமை வாய்ந்த ஊட்டி ரயில் நிலையத்தில், பாரதியாரின் பாடல் வரிகளை இந்து மகா சபையை உருவாக்கியவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியா எழுதியதாக தவறான பதாகை வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், 'இந்தியைப் பற்றிச் சிறு பேச்சு அறிவு மூலமாக இந்தி பேசத் தெரியாத மக்கள் நிறையக் காரியங்களைச் சாதிக்கின்றனர்' போன்ற வாசகங்களையும் அமைத்திருந்தனர். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் நீலகிரி எம்.பி ஆ.ராசா.
இந்திய ரயில் நிலையங்களில் இந்திப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக எனது நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 100 ஆண்டுகள் பழமை கொண்ட உதகமண்டலம் ரயில் நிலையத்தில் இந்தியில் நிறுவப்பட்டுள்ள பதாகைகள், தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளன.
உடனடியாக அவற்றை அகற்ற உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு ஒருநாளும் இந்தித் திணிப்பை ஏற்காது என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications