மறுசீரமைக்கப்பட்ட திருவிக நகர் பூங்கா..முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்..என்னென்ன வசதிகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செயற்கை வண்ண நீரூற்று பூங்கா, ஆண், பெண்களுக்கான தனிதனியான பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் 9 ஏக்கர் பரப்பளவில் சென்னை திருவிக பூங்கா புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. இந்த பூங்காவை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேட்டரி காரில் அமர்ந்தபடி பூங்காவை முதல்வர் மு.க ஸ்டாலின் சுற்றி பார்த்தார்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொழுபோக்கு இடங்களாக இருப்பது பெரும்பாலும் பூங்காக்கள்தன்.

நகர நெரிசலுக்கு மத்தியில் சற்று காற்றோட்டத்துடன் இளைப்பாற காலை மற்றும் மாலை வேளைகளில் பூங்காக்களில் மக்கள் அதிகம் நேரம் செலவிடுவதுண்டு.

புதுப்பொலிவுடன் பூங்கா

புதுப்பொலிவுடன் பூங்கா

இந்த நிலையில், சென்னை செனாய் நகரில் செயல்பட்டு வந்த திருவிக பூங்கா மெட்ரோ ரயில் பணிக்காக கடந்த 2011 ஆம் ஆண்டு மூடப்பட்டது. மெட்ரோ ரயில் பயணிகள் முடிந்த நிலையில் 2018- ஆம் ஆண்டு 18 கோடி செலவில் திருவிக பூங்கா மாநகராட்சி வளர்ச்சி குழுமத்தின் நிதி உதவியுடன் மேம்படுத்தப்பட்டது. செயற்கை வண்ண நீரூற்று பூங்கா, ஆண், பெண்களுக்கான தனிதனியான பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் 9 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா புதுப்பொலிவுடன் தற்போது காட்சி அளிக்கிறது.

சுற்றி பார்த்த முதல்வர் ஸ்டாலின்

சுற்றி பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்த பூங்காவை முதலர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் பேட்டரி காரில் அமர்ந்தபடி பூங்காவை முதல்வர் மு.க ஸ்டாலின் சுற்றி பார்த்தார். இந்த பூங்காவில் பூங்காவில் ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமையாக காட்சி தருகின்றன. பொதுமக்கள் இளைப்பாற நவீன வசதிகள் கொண்ட இருக்கைகள் உள்ளன.

அதிநவீன வசதிகள்

அதிநவீன வசதிகள்

இது தவிர எட்டு வடிவ நடைபாதை, இசை நீருற்று, கூடைப்பந்து, மைதானம், யோகா மையம், படிப்பகம், குழந்தைகள் பூங்கா, சறுக்கு பயிற்சி, பல வண்ண செயற்கை நீருற்று என பல வசதிகள் உள்ளன. இதைத்தொடர்ந்து பேட்டரி காரில் அமர்ந்தபடி முதல்வர் ஸ்டாலின் பூங்காவை சுற்றி பார்த்தார். அங்கு செய்யப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஸ்டாலின், பூங்காவை முறையாக பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

மேயர் பிரியா பங்கேற்பு

மேயர் பிரியா பங்கேற்பு

மேலும், மிக சிறந்த முறையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதற்காக அதிகாரிகளுக்கு பாராட்டுக்களையும் முதல்வர் தெரிவித்தார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங்பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+