சென்னையில் ஷேர் ஆட்டோவில் போவீங்களா.. 'யாரு சாமீ நீங்க'.. அதிர வைத்த அம்மா, மகன்கள்
சென்னை: சென்னையில் ஷேர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து பயணிகளிடம் நூதன முறையில் செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்த தாய் மற்றும் இரண்டு மகன்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இப்படியும் கூட திருட்டு நடக்கிறதா என்பதை கேள்விப்பட்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்களுக்கு சந்தேகமே வராத வகையில ஷேர் ஆட்டோ வைத்து திருடும் கும்பல் சிக்கி உள்ளது. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்வோரை குறிவைத்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளது. குடும்ப தொழிலாக செய்து வந்த தாய் மகன்கள் எப்படி சிக்கினார்கள் என்பதை பார்ப்போம்.

சென்னை கொண்டித்தோப்பு காஞ்சீபுரம் சபாபதி தெருவைச் சேர்ந்த 45 வயதாகும் மகேந்திர குமார் பட்டேல் என்பவர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இரவு தன்னுடைய வீட்டில் இருந்து மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள கடைக்கு போக முடிவு செய்துள்ளார். அதற்காக சாலையில் காத்திருந்தவர் அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தார். அவர் ஆட்டோவை விட்டு இறங்கியவுடன் பாக்கெட்டை பார்த்தபோது செல்போன் காணவில்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மகேந்திரகுமார் இது சம்பந்தமாக ஏழுகிணறு போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் பூக்கடை போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் ரீனா வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஷேர் ஆட்டோ பதிவு எண்ணை வைத்து விசாரித்துள்ளார்கள். மகேந்திர குமார் பட்டேல் பணம் மற்றும் செல்போனை பறிகொடுத்த ஆட்டோ வண்ணாரப்பேட்டை பழைய ஜெயில் ரோடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றியுள்ளது. இதை சிசிடிவி காட்சிகளில் பார்த்த போலீசார் ஆட்டோவை நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அப்போது ஆட்டோவில் இருந்த பெண் உள்பட 3 பேரும் மாற்றி மாற்றி பேசியுள்ளார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருவொற்றியூர் கார்கில் நகரை சேர்ந்த சுகுணா (59) மற்றும் அவரது மகன்களான மணலி சாஸ்திரி நகரைச் சேர்ந்த ரமேஷ் (32), எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பெருமாள் (24) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தாய் மற்றும் மகன்கள் உள்பட 3 பேரும் சேர்ந்து ஷேர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து அதில் ஏறும் பயணிகளிடம் நூதன முறையில் செல்போன் மற்றும் பணத்தை திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரமேஷ் டிரைவர் போல ஆட்டோவை ஓட்டி செல்வாராம். தாய் சுகுணாவும், தம்பி பெருமாளும் பயணிகள் போல பின்னால் அமர்ந்து இருப்பார்களாம். பஸ் நிறுத்தம், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம் மற்றும் செல்போன்களை நூதன முறையில் திருடி வந்துள்ளார்கள்.
அவர்கள் பிடிப்பட்ட அந்த ஒரு நாளில் மட்டும் 7 செல்போன்களை திருடியிருக்கிறார்கள். ஷேர் ஆட்டோவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மொத்தம் 34 செல்போன்களை பயணிகளிடம் திருடி பர்மா பஜாரில் விற்று பணமாக்கியுள்ளார்கள். இதையடுத்து போலீசார் 34 செல்போன்களையும் பறிமுதல் செய்து தாய் சுகுணா மற்றும் அவரது மகன்கள் ரமேஷ், பெருமாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்கள். மேலும் திருட்டு செல்போன்களை வாங்கி விற்பனை செய்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடத்திய இந்த மோசடி சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications