சென்னை ஓட்டலில் வாடகை காதலிகள்.. தி நகர் பிரபல பாரில் கெட்ட ஆட்டம்... டோக்கனில் இருக்கு விஷயம்
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் இயங்கும் பாரில் புதிய விதமான கலாச்சார சீரழிவுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொதுவாக ஆண், பெண் ஜோடியாக கலந்து கொள்ளும் சில பப் மற்றும் பார்களில் பெண்கள் இல்லாமல் ஆண்களை மட்டும் அனுமதிக்க மாட்டார்கள்.. ஜோடியாக பங்கேற்கும் ஓட்டலில் ஜோடியாக பங்கேற்க முடியும். ஆனால் குறிப்பிட்ட தி நகர் பாரில் வாடகைக்கு காதலிகள் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை கடந்த 20 வருடங்களில் கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து விட்டது. ஏற்கனவே வளர்ந்த நகரமான சென்னையில் பணக்காரர்களுக்கு பணத்தின் மதிப்பு குறைந்து வருகிறது.. ஏழைகளுக்கோ அதிகரித்து வருகிறது. அதாவது ஒருபக்கம் லட்சங்களில் சம்பளம் வாங்குவோர் அதிகமாக இருக்கிறார்கள்.

மறுபக்கம் 20000, 30000 சம்பளம் வாங்கவே போராடும் சமூகமும் அதிகமாக இருக்கிறது. மிக அதிகமாக சம்பளம் வாங்குவோரில் பலரது வாழ்க்கை முறை வேறு மாதிரியாக இருக்கிறது. வார இறுதியில் ஈசிஆரில் உல்லாச மது விருந்து அல்லது பார்களில் ஜோடியாக மது விருந்து, கிளப்களில் நடனம் மற்றும் மது விருந்து என உற்சாகமாக இருக்கிறார்கள்.
மது விருந்துடன் நடனம்
வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனி அல்லது ஞாயிறு இரவு சென்றால், கிளப்களிலும், பப்களிலும் ஜோடி ஜோடியாக நடனம் ஆடுவதை பார்க்க முடியும். நல்ல சாப்பாடு அத்துடன் மது விருந்து கூடவே நடனம் என்று கொண்டாடுவார்கள் பலர். இது சென்னையில் மட்டுமல்ல, பெங்களூர், கோவை, கொச்சின், ஹைதராபாத், மும்பை, டெல்லி, புனே, அஹமதாபாத், கொல்கத்தா உள்பட இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள ஊர்களில் சர்வ சாதாரணமாக இருக்கும்.
வாடகை காதலிகள்
சென்னையில் உள்ள பப்களில் இளம் ஜோடிகள் பங்கேற்று மது விருந்தில் ஆடுவார்கள்.. அதேபோல் குடும்பமாக பங்கேற்கும் மதுபான பார்களை பொறுத்தவரை ஜோடியாக பங்கேற்று மது விருந்தில் ஆடுவார்கள்.. மது அருந்தி உற்சாகமாக இருப்பார்கள்.. அப்படி ஜோடியாக பங்கேற வேண்டிய பார்களின் நேரத்தில் பேச்சுலர்களுக்கு அனுமதி கிடையாது. இதுதான் பல பார்களில் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் தி நகரில் உள்ள ஒரு தனியார் பாரில் வாடகைக்கு காதலிகள் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டோக்கன் அடிப்படையில் காதலிகள்
அதாவது பாரில் பங்கேற்கும் பேச்சுலர்கள் ஜோடியாக பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யும் விதமாக திநகர் ஜி என் செட்டி சாலையில் உள்ள பாரில் வாடகைக்கு காதலிகள் கிடைக்கிறார்கள். அந்த காதலிகள் பாரில் மது அருந்திவிட்டு ஆண்களுடன் நடனம் ஆடுவார்கள்.. சில நிமிடங்கள் காதலியாக வாழ்ந்துவிட்டு செல்வார்களாம்... அதாவது யார் என்னவென்றே தெரியாத ஆணுக்கு அங்கு வாடகை காதலி கிடைப்பதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தால் டோக்கன் அடிப்படையில் காதலிகள் கிடைப்பார்களாம்.
1000 கட்டணம்
மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அனுமதி பெற்றுள்ள குறிப்பிட்ட தனியார் பார், தினமும் இரவு 7.30 மணிக்கு செயல்பட தொடங்குகிறதாம். இந்த பாரில் செல்வதற்கு நுழைவு கட்டணமாக 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம்.. ஜோடியாக வராத பேச்சுலர்கள் உள்ளே சென்றதும் அங்கு தயாராக உள்ள வாடகை காதலிகளை டோக்கன் பெற்று அழைத்து சென்று ஜோடியாக ஆட்டம் போடலாம் என்கிறார்கள்.. ஒரு வாடகை காதலிக்கு 200 ரூபாயாம். சில நிமிடங்கள் நடனம் ஆடுவார்களாம்.
பெண்களுடன் நடனம்
இதை கேள்விப்பட்ட பல ஆண்கள், மதுஅருந்திவிட்டு உற்சாக நடனம் ஆட டோக்கன் பெற்று அந்த பெண்களுடன் மது அருந்துவிட்டு ஆடுகிறார்களாம். டோக்கன் காதலிகள் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார்களாம்.. மணிக்கணக்கில் ஆடும் பலர், இதற்காக பணத்தை டோக்கன் டோக்கனாக எடுத்து கொட்டுகிறார்களாம்.. சில மணி நேரம் பெண்களுடன் உற்சாக நடனம் ஆடுவதற்காக பல ஆயிரங்களை ஆண்கள் செலவு செய்கிறார்களாம்.
காவல்துறை நடவடிக்கை
இந்த பெண்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இப்படி நடனம் ஆடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக அவர்கள் யார் என்று தெரியாதவர்களுக்கு சில நிமிடங்கள் வாடகை காதலிகளாக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் விருப்பம் உள்ள சில பெண்களிடம் நள்ளிரவுக்கு மேல் சிலர் பணம் கொடுத்து அத்துமீறுவதாகவும் சொல்லப்படுகிறது.. இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications