சென்னை கேபி பார்க் கட்டிடம்.. 'மீண்டும் மீண்டும் பேட்ச் ஒர்க் குமார்'.. அறப்போர் இயக்கம் புகார்
சென்னை: சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் கட்டிடத்தில் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் மீண்டும் பேட்ச் ஒர்க் செய்து தப்பிக்க பார்க்கிறார்கள் என அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது.
அறப்போர் இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "கேபி பார்க் கட்டிடங்கள் முழுவதையும் ஆய்வு செய்த IIT குழு இந்த கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட 90% பூச்சு வேலை தரமற்றது என்று அறிக்கை அளித்துள்ளார்கள். அதாவது வீட்டின் சீலிங் பூச்சுவேலைக்கு ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு 3 மூட்டை மணல் சேர்ப்பதற்கு பதிலாக 13 மூட்டை மணல் சேர்த்துள்ளார்கள். சுவர் பூச்சு வேலைக்கு ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு 5 மூட்டை மணல் சேர்ப்பதற்கு பதிலாக 15 மூட்டை மணல் சேர்த்துள்ளார்கள். இது தவிர ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள படி கட்டிடத்தின் காங்ரீட் தரம் M30 இருக்கவில்லை.

இவ்வாறு தரமற்ற முறையில் செய்யப்பட்ட பூச்சுவேலை அனைத்தையும் இடித்துவிட்டு தரமான பூச்சுவேலை செய்து கொடுத்தால் மட்டுமே அந்த கட்டிடங்களில் சுவர்களும் தளங்களும் பாதுகாப்பாக அதிக வருடங்கள் தாக்குபிடிக்கும். ஆனால் திமுக அரசு தொடர்ந்து இந்த விஷயத்தில் மக்களை ஏமாற்றி வருகிறது. முதல் முறை புகார் வந்த போதும் உடைந்து விழுந்த இடங்களை மட்டும் பேட்ச் ஒர்க் செய்து சமாளித்த இவர்கள் தற்பொழுது பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையிலும் patch work செய்து கொடுத்து தப்பிக்க பார்க்கிறார்கள். அவர்களுடன் சேர்த்து இந்த மோசடியை செய்த PST நிறுவனத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்கள்.
அடித்தட்டு நிலையில் இருக்கும் மக்களை இவ்வாறு வஞ்சிப்பதற்கு எப்படித்தான் உங்களுக்கெல்லாம் மனசு வருதோ..! சமூக நீதி சமூக நீதி என்று வாய் கிழிய பேசுபவர்கள் கேபி மார்க் மக்களிடம் போய் பேசி பாருங்கள். திமுக அரசு சமூக நீதிக்கு செய்யும் துரோகம் புரியும்.

* KP Park கட்டிட ஊழல் செய்த PST நிறுவனம் மீது FIR பதிவு செய்து அந்த நிறுவனத்தை Blacklist செய்யுங்கள்.
* இந்த கட்டிடத்தை கண்காணிக்காமல் கோட்டை விட்ட அரசு ஊழியர்கள் மீது FIR போடுங்கள்.
* இந்த கட்டிடத்துக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர், இந்நாள் MLA பன்னீர்செல்வம் அவர்களை விசாரியுங்கள்.
* விரிவான ஆய்வு செய்து அனைத்து குறைகளையும் கண்டறிந்து பழுது பார்த்து அந்த அப்பாவி மக்களின் உயிரை காப்பாற்றுங்கள்." இவ்வாறு அறப்போர் இயக்கம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
முன்னதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், " கடந்த அதிமுக ஆட்சியில் சந்தை விலையை விட அதிக விலைக்கு செட்டிங் செய்து கொடுக்கப்பட்ட டெண்டர் மூலம் PST நிறுவனம் கட்டிய கட்டிடம் தான் புளியந்தோப்பு KP park குடியிருப்பு கட்டிடங்கள். இதை கட்டி முடித்த சில மாதங்களிலேயே பூச்சுவேலைகள் இடிந்து விழுவதாக புகார் வந்ததை அடுத்து அப்பொழுது ஆட்சி பொறுப்பை ஏற்றிருந்த திமுக அரசு IIT ஆய்வுக்கு உத்தரவிட்டது. அந்த ஆய்வறிக்கையில் இந்த குடியிருப்பில் பயன்படுத்தப்பட்ட பூச்சு வேலை 90% தரமற்றது என்று முடிவு வெளியிடப்பட்டது.
ஆய்வறிக்கை அடிப்படையில் கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை பாயும் என்று வீர வசனம் பேசிய அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அன்பரசன் ஆகியோர் அந்த அறிக்கை வந்த பிறகு இந்த கட்டிடம் குறித்து வாய் திறக்கவே இல்லை. தற்பொழுது அந்த கட்டிடம் முழுவதுமாக இடிய துவங்கி விட்டது. மக்கள் வசிக்க பாதுகாப்பு இல்லாத கட்டிடமாக மாறிவிட்டது.
தினமும் அங்கே மக்கள் உயிர் பயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அங்கிருந்து வெளியேறி போக அவர்களுக்கு வேறு இடமும் கிடையாது. ஆனால் இந்த தரமற்ற கட்டிடத்தை கட்டி கோடிக்கணக்கில் சம்பாதித்த PST நிறுவனம் கோடிகளில் புரள்கிறது. திமுக ஆட்சியிலும் அரசு பணிகளை டெண்டர் எடுத்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.
இந்த தரமற்ற கட்டிடத்தை கண்காணிக்க தவறிய அரசு ஊழியர்கள் மக்கள் பணத்தில் எந்த வித கூச்சமும் இல்லாமல் சம்பளமும் கிம்பளமும் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். நடவடிக்கை எடுப்பதாக சட்டசபையில் முழங்கிய அமைச்சர் அன்பரசன் இதை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்? தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?
PST நிறுவனம் கருப்பு பட்டியல் இடம் பெற செய்யப்பட வேண்டும். அவர்கள் மீதும் இதை கண்காணிக்க தவறிய அரசு ஊழியர்கள் மீதும் FIR போடப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்." இவ்வாறு அறப்போர் இயக்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications