பீகாரில் நிதீஷ் அலை ஓய்கிறது.. காங். கூட்டணிக்கு பெரும் வெற்றி.. ரிபப்ளிக் டிவி கணிப்பு
சென்னை: பீகார் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 118 முதல் 138 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக ரிபப்ளிக் டிவியும், ஜன் கி பாத்தும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
பீகார் சட்டசபைத் தேர்தல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அதன்படி ரிபப்ளிக் டிவி - ஜன் கி பாத் இணைந்து நடத்திய எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதில் பீகாரில் 118 முதல் 138 இடம் வரை காங். கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 91 முதல் 117 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நிதீஷ் குமார் ஆட்சியை இழக்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாக தெரிகிறது.
மற்றவர்களுக்கு 3 முதல் 6 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட முறையில் பாஜகவுக்கு 60 முதல்75 இடங்கள் வரையிலும், ஜேடியூவுக்கு 31 முதல் 42 வரையிலும், ஆர்ஜேடிக்கு 79 முதல் 91 இடங்கள் வரையிலும் கிடைக்கக் கூடும். லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 முதல் 8 இடங்கள் வரை கிடைக்கலாமாம்.
பீகார் மாநிலத்தில் கடந்த 15 வருடமாக நிதீஷ் குமார் ஆட்சி புரிந்து வருகிறார். ஆனால் அவரது ஆட்சி மீது மக்கள் பெரும் அதிருப்தியில் இருப்பது தற்போது வெளியாகி வரும் எக்ஸிட் போல் முடிவுகள் மூலம் தெரிய வருகிறது. முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தன. ஆனால் அதற்கு நேர் மாறாகவே நடக்கப் போவதாக இந்த எக்ஸிட் கருத்துக் கணிப்பு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications