அன்ரிசர்வ்டு பெட்டிகளை ரயில்களில் அதிகரிக்க வேண்டும்! முன்பதிவு இல்லாத பெட்டியில் சர்ப்ரைஸ் வருமா?
சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று இனிமேல் அடுத்தடுத்த தொடர் பண்டிகை விடுமுறைகள் வர உள்ளன.. இந்நிலையில், சொந்த ஊர் செல்ல முன்பதிவு (Reservation) டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள், வழக்கமான ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டிகளை (Unreserved Coaches) இணைக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திடம் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர்.
தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், சிறப்பு ரயில்களிலும் கூட்ட நெரிசல் வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்படும்..

முன்பதிவு இல்லாத பெட்டி
இதற்காகவே தொடர்விடுமுறை, பண்டிகை விடுமுறைகளுக்கு முன்பாகவே ரிசர்வேஷன் முறையை செயல்படுத்தி வருகிறது.. அத்துடன், முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டும் வருகின்றன. இந்த முன்பதிவு தேவையில்லாத ரயில்களில், குறைந்த கட்டணத்தில் அதிகமானோர் செல்லவும் முடிகிறது.
கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை முன்பதிவு இல்லாத பெட்டிகளில், 45 கோடி பேர் பயணித்ததன்மூலம், 1200 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே கடந்த வாரம் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டிருந்தது.
அதாவது இந்த 7 மாதங்களில் மட்டும், 45 கோடி பேர் பயணம் செய்திருக்கிறார்களாம். இதையடுத்து, அனைத்து விரைவு ரயில்களிலும், தலா 4 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இதுவரை, 261 முன்பதிவு இல்லாத பெட்டிகளை கூடுதலாக இணைத்துள்ளதாகவும், நாட்டிலேயே தாமதமின்றி ரயில்கள் இயக்குவதில், தெற்கு ரயில்வே முதலிடத்தில் உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தங்களது திருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
ரயில் டிக்கெட்
ஆனாலும், புதிய கோரிக்கை ஒன்று பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது.. பொதுவாகப் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பயணம் செய்ய, 60 நாட்களுக்கு முன்பே முயற்சி செய்தாலும் குறிப்பிட்ட சில ரயில்களில் டிக்கெட் கிடைப்பது பெரும் சவாலாகவே உள்ளது.. ரிசர்வேஷன் கிடைக்காதவர்கள், ஸ்பெஷல் ரயில்களை நம்பி காத்திருக்கின்றனர். ஆனால், அதிலும் எல்லோருக்கும் சீட் கிடைப்பதில்லை.
அன்-ரிசர்வ்டு பெட்டிகள்
இதனால் வேறு வழியில்லாமல், ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவில்லாத (General) பெட்டிகளில் பயணம் செய்ய திட்டமிடுகின்றனர். ஏகப்பட்ட பயணிகள் முண்டியடித்து இந்தப் பெட்டிகளில் ஏறுவதால், கூட்ட நெரிசல் தாங்க முடிவதில்லை.. இந்த அளவுக்கு நெரிசல் ஏற்படுவதால், நிம்மதியான பயணமும் கேள்விக்குறியாகி விடுகிறது..
அதுமட்டுமல்ல, சிலசமயம் ஆபத்தாக படிக்கட்டில் தொங்கி கொண்டும் செல்லும் நிலைமையும் உள்ளது.. பயணிகளுக்கு இடையே வாக்குவாதங்களும் தள்ளுமுள்ளுகளும் ஏற்படுகின்றன. அதிக டிக்கெட் வழங்கப்படுவதால், டிக்கெட் பரிசோதகர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் வெடிக்கிறது..
ரயில்களில் சௌகரியம்
இதனை தவிர, இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பயணிகளின் பொருட்கள் திருட்டுப் போவது போன்ற பல்வேறு பிரச்சினைகளும் எழுகின்றன.
பண்டிகை காலங்களில் இப்படியான சிக்கல்களை தவிர்க்கவும், பயணிகள் சௌகரியமாக சிரமமின்றி பயணம் மேற்கொள்ளவும், ரயில்வே நிர்வாகம் உடனடியாகச் சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
முன்பதிவில்லாத பெட்டிகள்
முக்கியமாக, பண்டிகை காலங்களில் மட்டும் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில், கூடுதல் முன்பதிவில்லாத பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்..
அதேபோல ஒரு பொதுப் பெட்டியில் எவ்வளவு பேர் பயணிக்க முடியுமோ, அதற்கேற்ற எண்ணிக்கையில்தான் டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும்.. கூடுதல் டிக்கெட் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..
பொதுப் பெட்டிகள் இணைக்க வேண்டுகோள்
இதுகுறித்து பயணிகள் தரப்பில் மேலும் சொல்லும்போது, வழக்கமான ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டிகளை இணைத்தால் உபயோகமாக இருக்கும் .. AC பெட்டிகளை அதிகரிக்கும் ரயில்வே நிர்வாகம், சாமானிய மக்களின் நலனுக்காக முன்பதிவில்லாத பெட்டிகளை அதிகரிக்கலாம்.. இதனால் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் சொந்த ஊருக்கு மகிழ்ச்சியுடன் சென்று வர முடியும்" என்கிறார்கள்.
வரும் நாட்களில் அடுத்தடுத்த தொடர் விடுமுறைகள் வரவுள்ளதால், வழக்கமான கூடுதல் பொதுப் பெட்டிகள் இணைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ளதால், ரயில்வே நிர்வாகம் இதுகுறித்து என்ன முடிவெடுக்கும் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications