Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5வது லேயர்! பூமி மையத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு சர்ப்ரைஸ்! எதிர்பார்க்காத புது கண்டுபிடிப்பு

பூமியில் இதுவரை வெறும் 4 லேயர்கள்தான் இருந்தன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூமியின் மையத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். இதுவரை கண்டுபிடிக்காத புதிய கண்டுபிடிப்பு ஒன்றை அவர்கள் நிகழ்த்தி உள்ளனர்.

நமது பூமியின் மையத்தில் மாபெரும் நெருப்பு கோளம் உள்ளது. பூமியின் சூட்டை காப்பது அதுதான். நமது தரையில் ஒரு துளை போட்டு, அந்த துளையை 5000 கிலோ மீட்டர் ஆழத்திற்கு தோண்டுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

அப்படி தோண்டும் பட்சத்தில் 5000 கிலோ மீட்டர் ஆழத்தில் நாம் பூமியின் மையத்தை அடைந்து விடுவோம். அந்த பகுதியில் வெறும் நெருப்பு கோளம்தான் இருக்கிறது. இங்கே திரவ நிலையில் இரும்பு குழம்பு எரிந்தபடி காணப்படும்.

சமீபத்தில் இந்த நெருப்பு கோளம் குறித்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியானது.

அதிர்ச்சி தரும் செய்தி

அதிர்ச்சி தரும் செய்தி

இந்த கோளம் தனியாக உட்பகுதியில் சுற்றிக்கொண்டு இருக்கும். அதாவது ஒரு பந்துக்குள் இன்னொரு பந்து இருப்பதாக யோசியுங்கள். மேலே இருக்கும் பந்து ஒரு வேகத்தில் சுற்றுகிறது. உள்ளே இருக்கும் பந்து இன்னொரு வேகத்தில் சுற்றுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிதான் பூமியின் மையத்தில் இருக்கும் இந்த கோளமும் சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த பூமியின் மைய கோளம் எப்படி சுற்றுகிறது, எதனால் சுற்றுகிறது, இதன் சுற்றும் வேகம் எவ்வளவு என்பதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. இதில் ஆராய்ச்சியாளர்கள் பலர் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இந்த உட்கோளம் எதிர்திசையில் சுற்ற தொடங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்து இருந்தனர்.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இந்த நிலையில்தான் பூமியின் மையத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். இதுவரை கண்டுபிடிக்காத புதிய கண்டுபிடிப்பு ஒன்றை அவர்கள் நிகழ்த்தி உள்ளனர். அதன்படி பூமி மையத்தில் இருக்கும் கோளத்திற்கு உள்ளே இன்னொரு கோளம் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். Nature Communications என்ற ஆய்வு பத்திரிகையில் வெளியாகி இருக்கும் கட்டுரையில் இந்த தகவல் இடம்பெற்று உள்ளது. தற்போது வரை பூமியில் crust அதாவது வெளிப்பகுதி, mantle என்ற உட்பகுதி , outer core என்ற உட்கோளத்திற்கு மேலே இருக்கும் பகுதி, கடைசியாக inner core என்று அழைக்கப்படும் மையப்பகுதி உட்கோளம்.

5வது லேயர்

5வது லேயர்

பூமியில் இதுவரை இந்த 4 லேயர்கள்தான் இருந்தன. தற்போது 5வதாக ஒரு லேயர் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது உட்கோளத்தின் மையத்தில் இன்னொரு கோளம் இருப்பதாக கண்டுபிடித்து உள்ளனர். இந்த கோளம் மர்ம உலோகம் ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர். மிக தெளிவாக உள்ளே ஒரு உலோகம் இருப்பதை இவர்கள் கண்டுபிடித்து உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

உட்புறம்

உட்புறம்

பூமியில் ஏற்படும் நிலநடுக்கம், நிலநடுக்க அலைகள் போன்றவற்றை வைத்துதான் இந்த பூமியின் மையப்பகுதியின் பண்புகள் கணிக்கப்படுகின்றன. ஆனாலும் இவை எல்லாம் வெறும் கணிப்புதான். இன்னும் முழுமையாக பூமியின் மையப்பகுதியில் கொள்கைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பூமியில் ஏற்படும் நிலநடுக்கம் மூலம் உருவாகும் அலைகளை வைத்து, அந்த அலைகள் பூமிக்கு அடியில் எதிரொலிக்கும் விதங்களை வைத்து இந்த ஆய்வை செய்து அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். இது இரும்பு மற்றும் நிக்கல் கலந்து உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பந்து மட்டும் 1350 கிமீ அகலம் கொண்டது என்று அந்த ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம்

உலகம்

இந்த உலகத்தின் மொத்த விட்டம் 12750 கிமீ. இதில் மையம் மட்டும் 350 கிமீ அகலம் கொண்டது. அதாவது நாம் நெருப்பு பந்து என்று நினைத்துக்கொண்டு இருந்த பந்துக்கு மேலே இன்னொரு பந்து இருந்துள்ளது. இந்த உலோகத்தின் பண்புகள் தெரியவில்லை. அந்த மைய உலோகம் சுற்றுகிறதா என்றும் இதுவரை தெரியவில்லை அதை பற்றி தற்போதுதான் ஆய்வு செய்து வருகிறோம். வரும் ஆண்டுகளில் அதன் பண்புகள் தெரிய வரும் என்று இந்த ஆய்வை நடத்திய கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தான்-சன் பாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+