ஆயுத பூஜைக்கு 3 நாட்கள் லீவு! சொந்த ஊர் செல்ல இன்றே தொடங்கிய ரயில் முன்பதிவு!
சென்னை: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு வரபிரசாதமாக இருப்பது ரயில்கள்தான். குறைந்த கட்டணத்தில் எந்த வித அசதியும் அலுப்பும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக இருக்கிறது. இதனால்தான் இந்த பயணத்தை மக்கள் விரும்புகிறார்கள்.

இதனால் நாள்தோறும் ரயில்களில் முன்பதிவு செய்த பெட்டிகள், முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலும் பண்டிகை காலங்களில் ரயில்களில் கூட்டம் அலைமோதும். பெரும்பாலும் பண்டிகை காலங்களில் சில மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்படும்.
அதாவது 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம், இதற்காக ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் அதற்கு மறுநாள் 12 ஆம் தேதி சனிக்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.
ஆயுதபூஜையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவுகளை முன்கூட்டியே மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள். அதன்படி ஆயுத பூஜை விடுமுறைக்காக அக்டோபர் 9-ஆம் தேதி புதன்கிழமை ஊருக்கு செல்வோர், இன்று முன்பதிவை மேற்கொள்ளலாம்.
அக்டோபர் 10ஆம் தேதி வியாழக்கிழமை ஊருக்கு புறப்பட்டுச் செல்வோர் வரும் 12 ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம். அது போல் அக்டோபர் 11 ஆம் தேதி ஊருக்கு செல்வோர் வரும் 13 ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications