14 மாதங்களில் இல்லாத உச்சம்.. அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகளை இனி வாங்கவே முடியாதா? மோசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க சில்லறை வர்த்தக பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபரில் நிலவிய பணவீக்கம்தான் இதுவரை நிலவியதிலேயே மிக அதிகம். நவம்பர் மாதத்திற்கான பணவீக்க தரவுகள் இன்னும் வெளியாகவில்லை.

vegetable chennai

அதன்படி உணவு விலைகள் மற்றும் பானங்களின் பணவீக்கம் உச்சம் அடைந்து உள்ளது. இந்த பணவீக்கம் தற்போது 9.7% ஆக உள்ளது. காய்கறிகள், தானியங்கள் மற்றும் எண்ணெய்கள் போன்ற முக்கிய பொருட்களின் பணவீக்கமும் உச்சம் அடைந்து உள்ளது. காய்கறி பணவீக்கம் 42.2% ஐ எட்டி உள்ளது. வரும் நாட்களில் இந்த பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஒரு பக்கம் வெங்காய விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிராவில் பருவமழை தாமதம், தேவை அதிகரிப்பு மற்றும் காலதாமதம் காரணமாக வெங்காயத்தின் விலை தமிழ்நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ₹50ல் இருந்து தற்போது ₹80 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து சீரான ஏற்றுமதிகள் உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து வர வேண்டிய ஒரு பகுதி இன்னும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாக சில்லறை விற்பனையாளர்கள் வெங்காயம் இன்றி சிக்கலில் மாட்டி உள்ளனர்.

மேலும் மழை பெய்து வருவதால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் எச்சரித்து உள்ளனர்.

இன்றைய காய்கறி விலை நிலவரம்:

பெங்களூர் தக்காளி 1 கிலோ ₹ 70.00
பீன்ஸ் 1 கிலோ ₹ 68.00
பீட்ரூட் 1 கிலோ ₹ 45.00
பாகற்காய் 1 கிலோ ₹ 80.00
சுரைக்காய் 1 கிலோ ₹ 35.00
கத்தரி 1 கிலோ ₹ 40.00
அகன்ற பீன்ஸ் 1 கிலோ ₹ 100.00
முட்டைக்கோஸ் 1 கிலோ ₹ 20.00
கேப்சிகம் 1 கிலோ ₹ 60.00
கேரட் 1 கிலோ ₹ 90.00
காலிஃபிளவர் 1 துண்டு ₹ 25.00
சாயோட் 1 கிலோ ₹ 30.00
கொலோகாசியா 1 கிலோ ₹ 75.00
கொத்தமல்லி இலைகள் 1
கொத்தமல்லி ₹ 20.00
வெள்ளரி 1 கிலோ ₹ 30.00
முருங்கை 1 கிலோ ₹ 60.00
இஞ்சி 1 கிலோ ₹ 210.00
பச்சை மிளகாய் 1 கிலோ ₹ 40.00
பச்சை வாழைப்பழம் 1 துண்டு ₹ 16.00
அவரைக்காய் 1 கிலோ ₹ 60.00
புதினா 1 கொத்து ₹ 70.00
வெங்காயம் (பெரியது) 1 கிலோ ₹ 80.00
வெங்காயம் (சிறியது) 1 கிலோ ₹ 100.00
வாழைப்பூ 1 கிலோ ₹ 30.00
வாழைத்தண்டு 1 துண்டு ₹ 30.00
உருளைக்கிழங்கு 1 கிலோ ₹ 50.00
பூசணி 1 கிலோ ₹ 50.00
முள்ளங்கி 1 கிலோ ₹ 50.00
முருங்கைப்பூ 1 கிலோ ₹ 50.00
ஸ்கார்லெட் பூசணி 1 கிலோ ₹ 50.00
புடலங்காய் 1 கிலோ ₹ 30.00
உருளைக்கிழங்கு 1 கிலோ ₹ 110.00

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+