ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்..!
சென்னை: ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தன்னை திமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்தவர் எஸ்.கே.கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் தற்போது இணைவது நான்காவது கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் தமிழ்மாநில காங்கிரஸ், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளில் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 5 ஆண்டுகளில் 4 கட்சிகளுக்கு இவர் மாறியிருப்பது கவனிக்கத்தக்கது.
நீதித்துறையில் உயர் பொறுப்பில் உள்ள பலரும் அவர்களது பதவிக்காலத்துக்கு பிறகு அரசியல் கட்சிகளில் இணைவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதற்கு உதாரணமாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து பாஜக சார்பில் எம்.பி.யாக உள்ள ரஞ்சன் கோகாயை கூறலாம்.
இதேபோல் மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பின் கேரள ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே திமுகவில் இணைந்த எஸ்.கே. கிருஷ்ணனுக்கு அக்கட்சியின் சட்டத்துறை நிர்வாகிகள் வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
-
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications