பத்திரிகையாளர்களுக்கு சூப்பர் நியூஸ்.. பென்ஷன் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
சென்னை: ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான கூடுதல் செலவினமாக ஒரு கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 1986ஆம் ஆண்டில் இருந்த நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்கள் 20 வருடங்கள் செய்திஆசிரியர், உதவி ஆசிரியர், செய்தியாளர், புகைப்பட கலைஞர் மற்றும் பிழை திருத்துனர் ஆகிய துறைகளில் பணியாற்றி இருந்தால் தகுதியின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றதும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்கள் என அறிவித்தார். மேலும் பத்திரிகையாளர் நல வாரியமும் அமைத்தார். பத்திரிகையாளர்களுக்கான மாத ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதிய தொகை ரூ.12,000ஆக உயர்த்தப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஓய்வூதியம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான கூடுதல் செலவினமாக ஒரு கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications