அரசியலை விட்டுப் போவதும், வருவதும் என் உரிமை! தமிழருவி புதிய பல்டி!
சென்னை: நான் அரசியலை விட்டுப்போவதும் என் உரிமை, அதைப்போல் திரும்ப வருவது என்னுடைய உரிமை என புதிய விளக்கத்தை அளித்துள்ளார் தமிழருவி மணியன்.
திராவிடக் கட்சிகளை ஒழிப்பதுதான் தனது லட்சியம் எனப் பல தேர்தல்களின்போதும் தமிழருவி மணியன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறார். அதற்காகப் பல புதிய கூட்டணிகளை உருவாக்க முயற்சி செய்தார் அவர்.

அதில் தோல்வியைச் சந்திக்கவே இறுதியாக ரஜினிகாந்த்தை வைத்து புதிய ஆட்சியைக் கொடுக்க முயன்றார். அவரும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொல்லவே வழக்கம் போல் இனிமேல் அரசியலைவிட்டே விலகுகிறேன் என்று அறிவித்தார்.
இப்போது மீண்டும் மக்களவைத் தேர்தல் களத்தில் குதித்துள்ளார் தமிழருவி மணியன். அண்ணாமலைக்கு ஆதரவாகப் பேசிவந்தவர், இப்போது மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும் என்பதற்காகக் களமாடி வருகிறார்.
ராமர் கோயில் திறப்பு விழாவை பாஜக அரசியலாக்கி வருவது தொடர்பாக ஒரு நேர்காணலை அவர் சமீபத்தில் அளித்துள்ளார். அதில், இஸ்லாமியர்களிடம் மோடி வெறுப்பு அரசியலைச் சொல்லிச் சொல்லியே மோடியை விரோதி போலக் கட்டமைத்து ஊடகங்கள் காட்டி வருவதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், அரசியலைவிட்டு விலகுவதாக அறிவித்த நீங்கள், திரும்ப ஏன் அரசியல் பாதைக்கு வந்தீர்கள் எனக் கேள்வி எழுப்பிய போது, 'நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று சொல்வது எப்படி என் உரிமையோ, அதைப்போல் அரசியலுக்குத் திரும்ப வருவது என் உரிமை' என்று ஒரு புதிய விளக்கத்தைக் கூறி இருக்கிறார்.
இப்படி அடிக்கடி அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டிருப்பதைப் பலர் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக திமுக ஆதரவாளர்கள் அவரது பழைய வீடியோக்களைப் போட்டு விமர்சித்து வருகின்றன.

தமிழருவி மணியன் தனது நேர்காணலில், "பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரட்டும். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் செய்யட்டும். அப்போது அவர்களை எதிர்க்கக்கூடிய முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.
ஆகவே, இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்திற்கு வராத பாஜக வரவேண்டும். நான் எப்படி எனது இளம் வயதில் திராவிடக் கட்சிகளை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் அரசியலில் களமாடி வந்தேனோ அப்படி இன்று அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார். ஆகவே, அவர் ஆட்சிக்கு வரட்டும் என்று ஆதரிக்கிறேன்.
பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டால், அவர்களை எதிர்த்து உடனே முதல் குரலை நான் தான் எழுப்புவேன்.
எனக்குத் திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும். அதை நான் சாவதற்குள் என் கண்களால் பார்க்கவேண்டும். அது நடக்கலாம், அல்லது நடக்காமல் கூடப் போகலாம். அதற்காக நான் சும்மா இருக்க முடியாது. அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருப்பேன். அவ்வளவுதான்.

நான் அரசியலைவிட்டுப் போகிறேன் என்று அறிவிப்பதற்கு எனக்கு எப்படி உரிமை உள்ளதோ அப்படித் திரும்ப வருவதற்கும் உரிமை இருக்கிறது. அது என் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. நான் திரும்ப வருவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை?
1952 வரை சோசலிச ஆட்சியைக் கொண்டு வருவேன் என்று நேருவுக்கு எதிராக அரசியல் செய்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அதில் தோல்வி அடைந்தார். அதன்பின்னர் அரசியலே வேண்டாம் என்று பூமிதான இயக்கம் நடத்தி வந்த விநோபா உடன் போய்ச் சேர்ந்தார்.

மீண்டும் 1975இல் மீண்டு அரசியலுக்கு வந்து மாணவர்களின் போராட்டத்திற்குத் தலைமைத் தாங்கி பிறகு நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தாரே?
அன்று ஏன் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அரசியலைவிட்டுப் போனார்? பிறகு ஏன் வந்தார்? அவர் போனது அவர் உரிமை. திரும்ப வந்தது அவர் உரிமை. தமிழருவி மணியன் போனது அவன் உரிமை. திரும்ப வந்ததும் அவன் உரிமை. அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை" என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications