Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மீண்டும் திருத்தம்.. பெற்றோர்கள் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் ஏப்ரல் 12 வரை பள்ளிக்கு வரவேண்டும் என்று அறிவித்துள்ள கல்வி துறை அதிகாரிகள், கோடை விடுமுறையில் மீண்டும் திருத்தம் செய்துள்ளனர். இதனிடையே தேர்வுகளை நீண்ட நாள் கழித்து வைத்தால் தேர்வுக்கு மாணவர்களை அழைத்து வருவது சவாலாக இருக்கும் என்றும் பழையபடி தேர்வை நடத்திய முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது,

12ம் வகுப்பு மாணவர்களுக்கும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமையுடன் தேர்வுகள் முடிகிறது.இதற்கிடையில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Revision during summer vacation for class 4 to 9 students in Tamil Nadu


முன்னதாக தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகள் திடீரென மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்ரல் 10, 12-ல் நடக்க இருந்த தேர்வுகள் ஏப்ரல் 22, 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன.

இந்த அட்டவணை மாற்றத்தால் கோடை விடுமுறை எப்போது தொடங்கும்? 10, 12-ந் தேதியும், அதன் பின்னர் 22, 23-ந் தேதிகள் வரையிலான இடைப்பட்ட நாட்களிலும் பள்ளிக்கு வர வேண்டுமா? என்ற கேள்விகள் எழுந்தது.இந்நிலையில் 'ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணிகள் காரணமாக மாணவர்களுக்கு ஏப்ரல் 6 (இன்று) முதல் 21-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் அவர்கள் மீண்டும் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி விருப்பமொழி பாடத் தேர்வு நடத்தப்பட வேண்டிய அவசியம் ஆகும். அதேபோல் நீண்ட விடுமுறை இருந்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்பு உருவாகும் என்பதால் கோடை விடுமுறை அறிவிப்பில் மீண்டும் திருத்தப்பட்டது.

இதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் (நேற்று) பருவதேர்வு முடிந்துவிட்டது. அவர்களுக்கு 6-ம் தேதி (இன்று) முதல் கோடை விடுமுறை. 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஏப்.8, 10, 12-ம் தேதிகளில் பள்ளிக்குவந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். இடைப்பட்ட தினங்கள் அரசு மற்றும் வார விடுமுறை நாட்கள்.

அதன்பிறகு, தேர்தல் பணிகள் காரணமாக ஏப்ரல் 15 முதல் 21-ம் தேதிவரை மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஏப்ரல் 22, 23-ம்தேதிகளில் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை விடப்படும்.

ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்ரல் 26வரை பள்ளிக்கு வருவது அவசியம்.அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 4 முதல் 9-ம்வகுப்புகளுக்கு இன்னும் 2 தேர்வுகள் மட்டுமே உள்ள நிலையில் இவற்றை பழைய அட்டவணையிலோ அல்லது 13, 16 போன்ற தேதிகளிலேயே நடத்தி முடிக்கலாம் என்றும் அதைவிடுத்து, ஏப்ரல் இறுதி வரை தேர்வினை கொண்டு சென்றதால் மாணவர்களை மீண்டும் தேர்வுக்காக வருவது கடினமாக இருக்கும் என்கிறார்கள்.

காரணம் சிலர், வெளியூர் வாக்களிக்க சொந்த ஊர் போய்விடுவார்கள்.. சிலர் வெளியூர்களுக்கு போய்விடுவார்கள்.. அவர்கள் மீண்டும் வராமல் போகும் வாய்ப்பு உள்ளது. தேர்வுக்கு வந்தாலும் வரவிட்டாலும் ஆல் பாஸ் என்பதால், தேர்வுக்கு பல மாணவர்கள் வராமல் போகும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள்.

தேர்தலுக்கு முந்தைய நாட்களில் தேர்வுக்கால அட்டவணையில் திருத்தம் செய்தால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இதன் காரணமாகவே ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் முடிந்த பிறகு எஞ்சிய 2 தேர்வுகளை நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+