தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்.9ல் ஆரம்பம் - புதிய அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை: கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுகள் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு கல்வியாண்டிலும் பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். 1 முதல் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு எந்த தேர்வும் எழுதாமல் தேர்ச்சி பெற்றனர்.

நடப்பாண்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. செப்டம்பர் முதல் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மாணவர்களின் தேர்வு குறித்த அச்சத்தை போக்கும் வகையில் ஜனவரி, மார்ச் மாதங்களில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.
அதன்படி முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், கொரோனா 3ஆம் அலை பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க அனுமதித்து உத்தரவை பிறப்பித்தது.
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது. இதன்படி, பத்தாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதேபோல், பன்னிரெண்டாம் வகுப்பிற்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதியிலோ, மே மாதம் முதல் வாரத்திலோ பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications