விவசாயிகள் போராட்டம்: விரைவில் அரிசி பஞ்சம்! பாஜக செய்யும் ‘பாரத் அரிசி’ அரசியல்?
சென்னை: பாஜக அரசுக்குத் தலைவலி தரும் பிரச்சினையாக விவசாயிகள் போராட்டம் மாறி இருக்கிறது. டெல்லியை அவர்கள் முற்றுகை இடுவதைத் தடுக்க பலகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது மத்திய அரசு.
குறிப்பாக டெல்லியில் உள்ள முக்கியமான சாலைகளில் முள் வேலிகள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதையும் தாண்டி வேறு பாதைகளில் உள்ளே நுழைய முற்படும் விவசாயிகள் மீது புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளது காவல்துறை.

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் டெல்லி கலவர பூமியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அடுத்து என்ன நடக்கும்? தேர்தல் களத்தில் பாஜக எதிரான இந்தப் போராட்டம் பாதிப்பைத் தருமா? இது பற்றி சில விளக்கங்களை மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் கேட்டோம். அவர், வட இந்தியப் பகுதிகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.
மேலும் விவசாயிகளின் மாபெரும் தலைவராக இருந்த திகாயத், காலத்தில் நடந்த போராட்டங்களை நேரடியாகப் பார்க்கக்கூடிய வாய்ப்பை பெற்றவர். ஆகவே, அவரிடம் விளக்கம் கேட்டோம்.

பத்திரிகையாளர் ஷ்யாம், "நேதாஜிதான் 'டெல்லி சலோ' என்ற முழக்கத்தை முதன்முதலாக முன்வைத்தார். அப்படி என்றால் டெல்லிக்கு போ என்பதுதான் அர்த்தம். இந்தப் போராட்டத்தில் ஜாட் இன மக்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களின் வாக்கு வங்கி ரொம்ப முக்கியம்.
ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எல்லாம் அவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அதிக அளவில் விவசாயிகளாக உள்ளனர். அதை மனதில் கொண்டுதான் சரண் சிங்கிற்கு 'பாரத ரத்னா' விருதை பாஜக அரசு கொடுத்தது.
இந்தப் போராட்டம் கட்டாயம் பாஜகவுக்கு நெருக்கடியாகவேதான் இருக்கும். சந்தேகமே இல்லை. மக்களவைத் தேர்தல் 2024க்கான அறிவிப்பு அதிகபட்சமாக 3 வாரத்திற்கு வந்துவிடும். அதன்பிறகுப் போராட்டங்களை நடத்த முடியாது.

நாடாளுமன்ற அவை நடவடிக்கை அனைத்தும் முடிந்துவிட்டது. எனவே பாஜகவுக்கு சில பகுதிகளில் எதிரான மனநிலையை உண்டாக்கும். இது புதியதாக இல்லை. ஏற்கெனவே அந்தப் பகுதிகளில் மக்களின் மனநிலை பாஜகவுக்கு எதிராகவேதான் உள்ளது.
ஜாட் மக்களின் மத்தியில் மிகப்பெரிய உழவர் தலைவராக இருந்தவர் மகேந்திர சிங் திகாயத். அவருக்கு ரோல் மாடலாக இருவர் யார் தெரியுமா? தமிழ்நாட்டு விவசாயிகளின் மிகப்பெரிய தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடுதான். இவரைப் பார்த்துத்தான் தனது போராட்டங்களை எல்லாம் வகுத்தார் திகாயத்.
விவசாயிகளின் போராட்டத்தின் வீரியம் அதிகமானால் அது போராட்டத்தில் போய் முடியும். டெல்லியை முற்றுகையிட உள்ள விவசாயிகள் என்ன செய்வார்கள் என்றால்? கயிற்றுக் கட்டிலைக் கொண்டுவந்து போட்டு டெல்லியிலிருந்து செல்லும் பாதைகளில் மாதக்கணக்கில் படுத்து விடுவார்கள். அவர்களை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியாது. அந்தக் காலத்திலேயே அப்படித்தான்.

திகாயத் வழியில் வந்தவர்கள்தான் இன்றைக்கு விவசாயிகளின் போராட்டத்தைத் தலைமை தாங்கி வருகிறார்கள். இதில் என்ன முக்கியமான விசயம் என்றால், இந்த விவசாயிகளின் ஓட்டுகள் எல்லாம் பாஜகவுக்கு எதிரானவை. ஆகவேதான் இந்த ஓட்டுகளை பாஜக கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை.
குறிப்பாகப் பஞ்சாபில் உள்ள இந்த மக்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போடுவதில்லை. அதை மனதில் வைத்துத்தான் பாஜக பஞ்சாபில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறார்கள். ஏற்கெனவே சிரோன்மணி அகாலி தளம் கட்சியுடன் மாயாவதி கூட்டணியில் உள்ளார். அதை மனதில் வைத்துத்தான் பாஜக, மாயாவதியைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சி செய்கிறார்கள்.

மக்களைவைத் தேர்தலைப் பொறுத்தவரை மாயாவதி யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்லி வருகிறார். அங்கே 8% வாக்கு மாயாவதி கட்சிக்கு உள்ளது.
எங்கே எல்லாம் விவசாயிகளின் ஓட்டு எண்ணிக்கை அதிகம் உள்ளதோ அங்கே எல்லாம் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் குறைவு. ஆகவே அவர்கள் விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இதற்கு முன்னதாக 2019இல் இதே மாதிரியான பிரச்சினை வந்த போது பாஜக கண்டுகொள்ளவே இல்லை.
அப்போது பாஜக இந்து ஓட்டு வங்கியை மட்டுமே குறிவைத்தது. இப்போது அந்தக் கட்சியின் நிலைப்பாடு அதேதான். முடியப் போகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒரு நாள் நீட்டித்து ராமர் கோயில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று என்ன கட்டாயம் உள்ளது?

ராமர் கோயில் திறக்கப்பட்டுப் பல நாள்கள் ஆகிவிட்டன. இன்னும் கூட முழுமையாக அந்தக் கோயில் கட்டி முடிக்கப்படவில்லை என்பது பலருக்கும் தெரியும்?
போன முறையே விவசாயிகளின் போராட்டத்தைக் காங்கிரஸ் சரியாக அணுகவில்லை. இந்த விவசாயிகள் போராட்டம் முன்பு டெல்லியில் நடந்த போதுகூட அதில் அரசியல் கலப்பு இல்லாமலே நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் எதிர்க்கட்சியினரைக் கூட கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.
ஆதரவு தெரிவித்துப் பேச விவசாயிகள் அனுமதித்தார்கள். அதற்குள் ஊடுருவி அரசியல் செய்வதற்கு அவர்கள் இடமளிக்கவில்லை. எனவே 'இந்தியா' கூட்டணி எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்தப் போராட்டத்திற்குப் போக முடியாது.
சில மாதங்களில் தானியங்கள் கிடைக்காத நிலையை நோக்கி இந்தியாவே தள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக அரிசி. அது மிகப்பெரிய விலை உயர்வைச் சந்திக்க உள்ளது.

அப்படியான சூழல் வரும்போது பொதுமக்கள் விவசாயிகள் போராட்டம் பக்கம் கவனம் செலுத்த தொடங்குவார்கள். அதை முன்கூட்டியே உணர்ந்துதான் 'பாரத் அரிசி'யை பாஜக அறிமுகம் செய்கிறது.
கர்நாடக மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய அரிசி கிடைக்கவில்லை. அதையும் சேர்த்துக் கேட்டுத்தான் டெல்லியில் போராடி வருகிறார் அம்மாநில முதல்வர்" என்கிறார்

-
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications