தமிழ்நாட்டில் அரிசி விலை தாறுமாறு.. அச்சத்தில் மக்கள்.. கிலோவிற்கு 10 ரூபாய் வரை உயர காரணம் என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவிற்கு 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை விலை உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல் விளைச்சல் குறைந்துள்ளதும் அரிசி விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
காய்கறிகளின் விலை ஒருபக்கம் உச்சத்திற்கு சென்று மக்களை கவலைப்பட வைத்துள்ள நிலையில் அரிசி விலை உயர்வும் மக்களை அதிர வைத்துள்ளது. அரிசி மக்களின் அன்றாட உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. சாப்பாட்டு அரிசி, புழுங்கல் அரிசி, இட்லி அரிசி, பச்சரிசி என பலவிதமாக அரிசியை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் ஒருபக்கம் மழை வெள்ளம்.. மற்றொரு பக்கம் வறட்சி என நிலவுவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மட்டுமல்லாது அரிசி, பருப்பு, எண்ணெய் வித்துக்கள் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாகவே வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி போன்ற அனைத்து காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளன. தக்காளி விலை ஆப்பிள் விலைக்கு நிகராக விற்பனையாகி வருகிறது. இதனால் கடைக்குப் போய் மளிகை, காய்கறி சாமான்கள் வாங்கவே அச்சமடைந்துள்ளனர் மக்கள். இந்த விலை உயர்வு போதாது என்று தற்போது அரிசி விலையும் உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்குப் முன்பு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள பொன்னி அரிசியின் விலையானது, தற்போது 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. 25 கிலோ சாப்பாட்டு அரிசி சிப்பம் ரூ.200 வரை கூடியுள்ளது. சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. தரமான முதல் ரக சாப்பாட்டு அரிசி 25 கிலோ மூட்டை கடந்த மாதத்தில் ரூ.1,400 ஆக இருந்த நிலையில், அவை தற்போது ரூ.1,600 ஆகவும், இரண்டாவது ரக சாப்பாட்டு அரிசி ரூ.1,200ல் இருந்து ரூ.1,400 ஆகவும் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் மூட்டைக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கூடியுள்ளது. இதே போல இட்லி அரிசியும் 25 கிலோ மூட்டை ரூ.850 ரூபாயில் இருந்து ரூ.950 ஆக உயர்ந்துள்ளது.
பிரியாணி அரிசி ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்பட்ட நிலையில் தற்போது 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பச்சரிசி விலை ஒரு கிலோவிற்கு 12 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. பச்சரிசி குருணை ஒரு கிலோவிற்கு 8 ரூபாய் அதிகரித்து, 25 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அரிசி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இல்லத்தரசிகள் மட்டுமல்லாது ஹோட்டல் தொழில் செய்பவர்களும், மெஸ் நடத்துபவர்களும் இந்த விலை உயர்வினால் கலக்கமடைந்துள்ளனர்.
மழை வெள்ளம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல், அரிசி ஆகியவற்றின் வரத்தும் குறைந்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. பருவமழை ஒருபக்கம் காரணமாக கூறப்பட்டாலும். பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இம்மாதம் 18ஆம் தேதி முதல் 5 சதவீத ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை ஜி.எஸ்.டி கவுன்சில் வெளியிட்டுள்ளதும் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவதால் அரிசி உள்ளிட்டவற்றின் விலை உயரும் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். பேக்கேஜ் செய்யப்படாத அரிசி ஜி.எஸ்.டி வரம்பிற்குள் வராது என்றாலும், மாநில உணவுத் துறையானது அனைத்து கடைக்காரர்களுக்கும் அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை பேக் செய்யப்பட்ட வடிவில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக பாஸ்மதி அல்லாத பிற அரிசி ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவுத் துறை அமைச்சகம் அறிவித்தது. இதன்மூலம் உள்நாட்டுச் சந்தையில் தேவைக்கு ஏற்ற இருப்பை உறுதி செய்ய முடியும் என்றும், உள்நாட்டில் அரிசி விலை ஏறாமல் தவிர்க்க முடியும் என்றும் அரசு தெரிவித்தது.
உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியில் 40 சதவிகிதம் இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியா பாஸ்மதி அல்லாத அரிசியை 10.3 மில்லியன் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்ததாக ஏற்றுமதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அறிவிப்பு உலகளவில் பல நாடுகளில் வசிக்கும் அரிசி உணவை சாப்பிடும் மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரிசி ஏற்றுமதிக்கு தடை என்று கூறப்பட்ட உடனேயே பலரும் வரிசையில் நின்று அரிசியை வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்து விட்டனர்.
தமிழ்நாட்டிலும் விலை உயர்வை கருத்தில் கொண்டு பல வியாபாரிகள் அரிசி மூட்டைகளை பதுக்க ஆரம்பித்து விட்டனர். விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை பதுக்குபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பருவமழை சரியான அளவில் பெய்தால் மட்டுமே நெல் விவசாயம் சிறக்கும் அரிசி உற்பத்தி அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications