ரெடியா இருங்க.. உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட போகிறது.. சர்வதேச வல்லுனர் எச்சரிக்கை
நியூயார்க்: உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட போகிறது. ஆனால் இதை பார்த்து அச்சம் அடைய கூடாது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சர்வதேச மார்க்கெட் மிக மோசமாக உள்ளது. 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் சர்வதேச மார்க்கெட்டில் நடக்க போகிறது என்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து உள்ளார்.
அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், உலகில் 1930ல் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவை தொடர்ந்து அடுத்த மோசமான சரிவு நடக்க போகிறது. கிட்டத்தட்ட இந்த நூற்றாண்டில் அடுத்த பெரிய சரிவாக இருக்க போகிறது. ஆனால் இந்த சரிவை பார்த்து அச்சம் அடைய கூடாது. இந்த சரிவை நீங்கள் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். பிட்காயின் சரிந்தால் அதை பார்த்து கண்ணீர் விடாமல் கூடுதலாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தங்கம் விலை சரியும். அது சரிந்தாலும் கூடுதலாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
2025 இல் வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று அவர் கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார். 1992ல் சர்வதேச மார்க்கெட் கவிழ்ந்தது. இதனால் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதை Great Depression என்று அழைப்பார்கள்.

இப்போது அதே போன்ற கொடூர சம்பவம் நடக்க போகிறது என்று ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி என்று எச்சரித்து உள்ளார். பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமா தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் இந்த மே - ஜூன் மாதம் நடக்கும், என்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும், மார்க்கெட் சரியும் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாக பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளுக்கு விதிக்கும் வரிகளால் தங்கம், வெள்ளி விலை குறையலாம் என ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.
உலக அளவில் பிட்காயின் மதிப்பு பெரிய அளவில் சரியும். தங்கம், வெள்ளி மதிப்பு கிராஷ் ஆகும். இதன் மதிப்புகள் குறைந்ததும் உடனே அதில் முதலீடு செய்து வைத்துக்கொள்ளுங்கள். கடன் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கடன் நாளுக்கு நாள் உயரும். பொருளாதாரம் சரிந்தால்.. பொருட்கள் விலை குறையும். இதன் அர்த்தம் நாம் பணக்காரர்கள் ஆவதற்கு இதுவே சரியான நேரம் என்பதுதான், என்று பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications