செல்வந்தர் அதிமுக வேட்பாளர் ₹1000 கோடி.. தமிழக அமைச்சர்களின் மனைவியர் பெயரில் சொத்து மதிப்பு பாருங்க
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பு மனுக்களின் பரிசீலனை நிறைவடைந்துவிட்டது.. இதில் பல முக்கிய வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்கள் வாயிலாக வெளியாகியுள்ள அவர்களின் சொத்து விவரங்கள் பொதுமக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. நேற்றைய தினம் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பளார் யார் என்ற தகவல் வெளியாகி வியப்பை தந்திருந்த நிலையில், இன்று வேறொரு தகவல் வெளியாகி, அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.
தமிழகத்திலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராக அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடும் லீமா ரோஸ் மார்ட்டின் உருவெடுத்துள்ளார்.

பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியான இவர், தனக்கு ரூ.1,048 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதில் ரூ.139 கோடி மதிப்பிலான நகைகளும், ரூ.909 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் கட்டிடங்களும் அடங்கும். அவரது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.5,000 கோடியைத் தாண்டுகிறதாம்.
தவெக பணக்கார வேட்பாளர்கள்
சினிமாவிலிருந்து அரசியல் பிரவேசம் செய்துள்ள தவெக தலைவர் விஜய், பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் அவர், தனக்கு ரூ.624 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் ரூ.410 கோடி அசையும் சொத்துக்களாகும்.
மூன்றாம் இடத்தில், தவெக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா உள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.197 கோடிக்கும் அதிகம் எனத் தெரியவந்துள்ளது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், முதலிடத்தில் இருக்கும் லீமா ரோஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ள ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
அதேபோல், முதல் மூன்று இடங்களில் இருவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அமைச்சர்களின் சொத்து விவரம்
இந்நிலையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் ஒருபுறமிருக்க, தற்போதைய அமைச்சர்களின் மனைவியர் பெயரில் உள்ள சொத்து விவரங்களும் வெளியாகியுள்ளன. இதில் மூத்த அமைச்சர் துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி ரூ.61 கோடி சொத்துக்களுடன் அமைச்சர்களின் மனைவியர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.. அவருக்கு அடுத்தபடியாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மனைவி ஷர்மிளா ரூ.59.82 கோடி சொத்துக்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்..
இந்த லிஸ்ட்டில் மூன்றாம் இடத்தில் அமைச்சர் மு.பெ. காந்தியின் மனைவி கமலா ரூ.20.73 கோடி சொத்துக்களுடன் இருக்கிறார்.. அதேபோல் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மனைவி மணிமேகலை பெயரில் ரூ.17.26 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி ரூ.13.25 கோடி சொத்துக்களுடன் இந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார்..
மனைவி பெயரில் சொத்துகள்
அமைச்சர் பெரிய கருப்பன் மனைவி பிரேமா (ரூ.12.81 கோடி).. ரகுபதி மனைவி சரோஜா (ரூ.11 கோடி).. அன்பில் மகேஷ் மனைவி ஜனனி (ரூ.10.11 கோடி).. சக்கரபாணி மனைவி ராஜலட்சுமி (ரூ.9.44 கோடி) மற்றும் சாமிநாதன் மனைவி உமாதேவி (ரூ.8.39 கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்..
பல அமைச்சர்கள்.. தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரிலேயே அதிக முதலீடுகளை செய்திருப்பது வேட்புமனு பரிசீலனையின் போது தெரியவந்துள்ளது.. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் இந்த சொத்து விவரங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
-
180 இடங்களில் திமுக வெல்லும்.. தடம் தெரியாமல் வீழும் தவெக.. அப்போ அதிமுக? வெளியான முக்கிய சர்வே! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
அதிமுக 167 வேட்பாளர்கள்.. எந்தெந்த சமூகத்திற்கு எவ்வளவு முன்னுரிமை? - முழு விவரம் இதோ! -
“ராகுல் காந்தி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஜெயிக்கணும்னே நினைக்கலயா?”.. சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை -
எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் தனிச் செயலர்.. இப்போது புதிய தலைமைச் செயலாளர்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
மொத்தமாக அள்ளும் திமுக.. மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தானாம்! அதிமுக, விஜய்க்கு படுதோல்வி! புதிய சர்வே -
அடுத்தடுத்து வெளியான 4 சர்வே.. எல்லாம் சொல்லும் ஒரே விஷயம்.. நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சிக்கல்! -
234ஐ விடுங்க.. தமிழ்நாடு தேர்தல் முடிவை தீர்மானிக்க போகும்.. அந்த 131 தொகுதிகள்.. எப்படி தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை மட்டுமல்ல... மகளிர் உரிமையும் முக்கியம்.. திமுக, அதிமுகவின் கள நிலவரம் -
“வெற்றி வாய்ப்பு சூப்பரா இருக்கு.. 234 தொகுதிகளிலும் வெல்வோம்”.. கேட்டதுமே அழுத்தமாக சொன்ன ஸ்டாலின்! -
எடப்பாடிக்கு டெல்லி பயம்.. டெல்லிக்கு அமெரிக்கா பயம்.. கனிமொழி செம டைமிங்












Click it and Unblock the Notifications