பிரதமர் மோடி வரும் நேரத்தில் பாஜகவில் சலசலப்பு.. பொதுக்கூட்ட பண விவகாரத்தில் கட்சியினர் இடையே தகராறு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வருவதற்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பான விவகாரத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் மற்றும் விழுப்புரம் மாவட்ட தெற்கு மாவட்ட தலைவர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் விழுப்புரம் மாவட்ட பாஜகவில் சலசலப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி விட்டன. தேர்தல் பரப்புரை, தேர்தல் கூட்டணி, தொகுதிகளில் பங்கீடு போன்றவை தீவிரமாக நடந்து வருகின்றன. முன்பு முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க மாட்டேன் எனக் கூறியிருந்த டிடிவி தினகரன், இரு நாட்களுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, அன்புமணி தரப்பு பாமக, அமமுக, தமாக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருக்கின்றன.

இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஐஜேகேவின் பாரிவேந்தர், தமாகாவின் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் மேடையேற உள்ளனர்.
இந்த பிரமாண்ட மாநாட்டில் கலந்துகொள்ள விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தொண்டர்களை அழைத்து வர, கட்சி மேலிடம் சார்பில் ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பணத்தைப் பகிர்ந்து கொள்வதில் மாவட்டத் தலைவர் தர்மராஜ் மற்றும் மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சனை முற்றிய நிலையில், நேற்று காலை தர்மராஜின் வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் தென்னரசு ஆகியோர் தனது வீட்டிற்கு ஆட்களை அனுப்பி வாகனங்களை அடித்து உடைத்து தனது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மாவட்டத் தலைவர் தர்மராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் மற்றும் தென்னரசு உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பொது இடத்திலேயே மோதிக்கொண்ட சம்பவம் அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!











Click it and Unblock the Notifications