சரக்க தொட்ட.. நீ கெட்ட..! மது குடித்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றம்! பஞ்சர் ஆகும் பாகங்கள் என்னென்ன?
சென்னை: தொடர்ந்து இளைஞர்கள் இடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவது சுகாதார பிரச்சனையாக மட்டுமல்லாமல் சமூகப் பிரச்சினையாகவும் மாறி இருக்கிறது. மதுவை குடித்தவுடன் உமிழ் நீர் மண்டலம் தொடங்கி இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. குடித்தவுடன் உற்சாகம் ஏற்படுவது போல இருந்தாலும் அது உங்கள் உடல் பாகங்களில் ஏற்படும் வேதியியல் மாற்றம் தான் என்கின்றனர் மருத்துவர்கள்..
ஒரு காலத்தில் ஊருக்கு ஒருவர் அல்லது இருவர் மது குடிப்பவராக இருப்பார்கள். ஆனால் இப்போது ஊருக்குள் ஒருவர் அல்லது இருவர்தான் மது குடிக்காமல் இருக்கிறார்கள் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. அது மட்டுமல்லாமல் சிறு வயது தொடங்கி முதியவர்கள் வரை பலரும் போதை பழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

குறிப்பாக மது பழக்கம் இளைஞர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் மது விற்பனை என்ற சட்டம் இருந்தாலும் மது கடைகளில் அவை கடைபிடிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான்.
அதே நேரத்தில் மதுப்பழக்கம் உடல்நல பிரச்சனையை மட்டுமல்லாமல் சமூக பிரச்சனையாகவும் மாறுகிறது. மது குடித்த உடனேயே அது நேரடியாக ரத்தத்தில் கலக்கிறது. சிறிது நேரத்திற்கு உற்சாகம் பிறந்தது போல் இருந்தாலும் நாளடைவில் அது உடல் பாகங்களை சிறிது சிறிதாக கெடுத்து நமது உடல் நலனை அடியோடு சீரழிக்கும். மது பானங்களில் ஆல்கஹால் இருந்தாலும் அது 18, 36 என குறிப்பிட்ட சில சதவீதம் மட்டுமே இருக்கும்.
அது மட்டுமல்லாமல் டார்டாரிக் அமிலம், அசிட்டிக் ஆசிட், எத்தில் அசிடேட் ஆகிய வேதிப்பொருட்களும் அதிகமாக இருக்கிறது. அசிட்டிக் அமிலம் அதிகமானால் குடல் அரிப்பு, நெஞ்சு எரிச்சல், செரிமான அமைப்பு சேதமடைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். டார்டாரிக் அமிலம் அதிகமாகும் போது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயு கோளாறு, வயிறு மற்றும் குடல் அலர்ஜி ஏற்படும். மதுவின் பாதிப்புகளால் 200 வகையான நோய்கள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது.
மேலும் புற்றுநோய், கல்லீரல் அலர்ஜி, காசநோய் உள்ளிட்ட நோய்களும் வர வாய்ப்புள்ளது. தரம் குறைந்த மது அல்லது கள்ளச்சாராயத்தை குடிப்பதன் மூலம் உலக அளவில் உயிரிழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்கள் மதுவால் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது. சந்தோஷத்திற்காக குடிக்கிறேன் என சொன்னவர்கள் காலை 6:00 மணிக்கே குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் உடல் நலனோடு அவர்களது குடும்பத்தில் இருந்து நலனும் பாதிக்கப்படுகிறது. மதுவால் அதிகம் பாதிக்கப்படுவது கல்லீரல் தான். மது அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது கல்லீரல் இறுக்க நோய் அதாவது லிவர் சிரோசிஸ் ஏற்படுகிறது. அது கல்லீரல் புற்றுநோய் வரை எடுத்துச் செல்லும். அது மட்டுமல்லாமல் மது வயிற்றுக்குள் சென்றவுடன் கேஸ்ட்ரீட் எனப்படும் இரைப்பை சுழற்சி ஏற்பட்டு குடல்புண் ஏற்படும். வாய், தொண்டை, உணவு குழாய்களிலும் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறது.
உடலில் உள்ள நீர் உடனடியாக வியர்வை மூலம் வெளியேறுவதால் தசைநார் இழப்பு, மூளை பாதிப்பு நோய், கல்லீரல் பிரச்சனையால் சர்க்கரை நோய் பிரச்சினையும் வரலாம். விட்டமின் பி குறைபாடு காரணமாக வெர்னிக் சின்ட்ரோம் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இப்படி மது அருந்துபவர்களால் உடல் பாகங்கள் செயலிழப்பதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. எடுத்த எடுப்பிலேயே மதுவை குறைப்பதும் பிரச்சினை தான். உரிய ஆலோசனை மருத்துவ உதவிகள் மூலம் மனரீதியாக சிகிச்சை பெறுவதன் மூலம் மது பழக்கத்திலிருந்து விடுபடலாம். ஹோமியோபதி மருந்துகள் உடலில் மதுவினால் ஏற்படக்கூடிய சீர்கேடுகளை சரிப்படுத்தி மனரீதியான தூண்டுதல்களை குறைக்கும் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications