சென்னை மக்களை அலறவிடும் ‘டெங்கு’ பரவல்.. தினமும் 30+ பேருக்கு பாதிப்பு.. குழந்தைகள் உஷார்!
சென்னை: சென்னையில் சத்தமே இல்லாமல் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு தினமும் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் சாலையோரங்கள், பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களில் டெங்கு வைரஸை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாவதாக கூறப்படுகிறது.

சென்னையில் டெங்கு பாதிப்பு
இந்நிலையில், சென்னையில் பலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக தினமும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பள்ளி சிறுவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கொசு ஒழிப்பு பணிகளில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெங்கு பாதிப்பை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. யாரிக்கேனும் டெங்கு பாதிப்பு அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்
காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, மற்றும் தோல் அரிப்பு ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள். இவற்றில் ஒன்றிரண்டோ, அல்லது அனைத்து அறிகுறிகளுமோ ஏற்படலாம். அறிகுறிகள் இல்லாமலும் டெங்கு காய்ச்சல் ஏற்படக்கூடும்.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்
1. கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.. வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற நீர் தேங்கக்கூடிய இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
2. டெங்கு கொசு என்று அழைக்கப்படும் ஏடீஸ் கொசு சுத்தமான தண்னீரில்தான் முட்டையிடும். அதனால் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்துக் குடிப்பது நல்லது.
3. குழந்தைகளை கொசுக்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். ஏடீஸ் கொசு பொதுவாக பகல் நேரத்தில் கடிக்கும். அதனால் பகலில் பள்ளிகளிலோ அல்லது மற்ற இடங்களிலோ குழந்தைகளுக்கு கொசு கடிக்காமல் பாதுகாக்க வேண்டும்.
4. டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications