ரூ.1 கோடி இருந்தால் போதும்னு நினைக்கிறீங்களா?அடுத்த 15 வருஷத்தில் மதிப்பு எவ்வளவு குறையும் தெரியுமா?
சென்னை: 1 கோடி ரூபாய் இருந்தால் போதும் என்று வருங்காலத்திற்கு பணம் சேர்ப்பவர்கள்.. அன்றைய நாளில் இன்று ஒரு கோடி ரூபாய்க்கு இருக்கும் மதிப்பு என்னவாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. எனவே இன்றைய ஒரு கோடியின் மதிப்பு அடுத்த 15 ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
கஷ்டப்பட்டு எப்படியாவது ஒரு கோடி ரூபாயை உழைத்து சம்பாதித்துவிட வேண்டும்.. லைஃப் லாங் செட்டில் ஆகிடலாம் என்ற கனவு இல்லாத நடுத்தர மக்களே இல்லை என்று சொல்லிவிடலாம். சிலரோ இப்பவே ஒரு கோடி கிடைத்தால் கூட பிக்சட் டெபாசிட்டில் போட்டு வாழ்க்கையை அப்படியே கோடீஸ்வரராக நகர்த்திவிடலாம் என்று எண்ணுவார்கள்..

ஆனால், தற்போதைய 1 கோடியின் மதிப்பு அடுத்த 15, 20 ஆண்டுகளில் மதிப்பு எந்த அளவு இருக்கும்.. என்றாவது நினைத்து இருக்கிறீர்களா? அது குறித்தே இதில் நாம் இங்கு காண இருக்கிறோம். பணத்தின் மதிப்பு குறைவது பொருட்களின் விலை அதிகரிப்பதுமே பணவீக்கம் என்போம். எளிதாக சொல்வது என்றால் ஒரு காலத்தில் 10 ரூபாய்க்கு வாங்கிய பொருளை இன்று 100 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
அடுத்த 15 ஆண்டுகளில்: எடுத்துக்காட்டுக்கு தங்கம் விலையைக் கூட சொல்ல முடியும். 1950ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சராசரியாக 99 ரூபாயாக இருந்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் சராசரி விலை 18,500 ரூபாயாக இருந்தது. அடுத்த 15 ஆண்டுகளில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 60 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இப்படி பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
20 ஆண்டுகளில் 1 கோடியின் மதிப்பு: இதனால், மக்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. இதனால், இன்று முதல் மாதம் ரூ.10 ஆயிரம் சேமித்து ஒரு கோடியை எட்ட வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பிடிக்கும். அதாவது ஆண்டுக்கு 12 சதவிகித வட்டி கிடைத்தால் இந்த தொகை கிடைக்கும். அடுத்த 20 ஆண்டுகளில் 1 கோடியின் மதிப்பு இன்று இருக்கும் அதே அளவு இருக்குமா? என்றால் இருக்காது. சரி எவ்வளவு இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்கள்?
பணவீக்க விகிதம்: பணவீக்க விகிதம் 5 சதவிகிதமாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டால்.. அடுத்த 15 ஆண்டுகளில் 1 கோடி ரூபாயின் மதிப்பு இன்றைய 48 லட்சத்திற்கு என்ன இருக்கிறதோ.. அதுவாகத்தான் இருக்க கூடுமாம். அதேபோல, 20, 25 மற்றும் 30 ஆண்டுகள் என எடுத்துக்கொண்டால் 1 கோடியின் மதிப்பு அன்றைக்கு முறையே 37.68 லட்சம், ரூ.29.53 லட்சம் மற்றும் 23.13 லட்சமாக இருக்கும்.
பொருளாதார நிபுணர்கள் கருத்து: 5 சதவீத பண வீக்கம் தொடர்ந்தால் மதிப்பு மேற்கண்டபடி இருக்கும். இல்லையென்றால் இன்னும் குறைவாக செல்ல வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே எதிர்கால சேமிப்பில் ஈடுபடுபவர்கள் இதனையும் மனதில் வைத்தே சேமிக்க வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்கள் கருத்தாக உள்ளது.
குழந்தைகளின் கல்வி செலவிற்காக சேமிப்பவர்கள்: பணவீக்கம் 5 - 6 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிட்டால் வரும் ஆண்டுகளில் மருத்துவ செலவு, கல்வி செலவு என அனைத்தும் தற்போது இருப்பதை விட பலமடங்கு உயரும். எனவே உங்கள் முதலீடுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஓய்வுக்காலத்திற்கும், குழந்தைகளின் கல்வி செலவிற்காகவும் சேமிப்பவர்கள் இதையெல்லாம் மனத்தில் வைத்தே எவ்வளவு தொகையை சேமிக்க போகிறோம் என்பதை கவனத்தில் கொள்ள கொண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications